மயில்வாகனன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மயில்வாகனன் |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 22-Feb-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 584 |
புள்ளி | : 127 |
இன்னும் எது நானென்று தெரியவில்லை... தெரிந்ததும் சொல்கிறேன்.
திருப்பூர் சாமளாபுரத்தில் பெண்கள்தான் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது?
"மாவட்ட ஆட்சியாளர்" என்று நம் தமிழில் அர்த்தம் சொன்னாலும், கலெக்டர் என்றால் சேகரிப்பாளர் என்றே அர்த்தம். குறைகளை சேகரித்து அதை களையெடுப்பது, வரிகளை சேகரித்து அதனை கஜானாவில் சேர்ப்பது, களைகளை சேகரித்து அதை கருவருப்பது. இனிமேல் "மாவட்ட சேகரிப்பாளர்" என்று அவரை ஏன் அழைக்கக் கூடாது ???? ஜனநாயகத்தில் மக்கள் தான் ஆட்சியாளர்கள் என்றால் ??????
"அன்று பெய்த மழை"க்குப் பிறகு
இன்னொரு படப்பிடிப்புக்கு
அவள் வந்திருந்தாள்
நீல மலைக்கு...
குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில்
பழைய தொலைப்பேசி அலுவகத்திற்கு
ஐந்தாறு நாள்
அவள் தொடர் வருகை..
ஐதராபாத்துக்கு இரவுகளில்
அலையாடும் குரலில்
என்ன துயரமோ...
அவள் பேசுவதைப்
பார்த்ததுண்டு ..
ஐந்தாறு நாளும்
அவளோடு
பேசியதும் உண்டு
ஆங்கொரு அலுவலக அறையில்
தங்கிப் பணிபுரிந்த
இளம் பொறியாளன் நான்..
அது..
ஆயிரத்து தொள்ளாயிரத்து
தொண்ணூறு .
கவர்ச்சி காட்டுபவர்களின்
கலையுலகில்
அவளிடம் மட்டுமே
கவர்ச்சி பூத்திருந்தது
'அடுக்கு மல்லிகையின் ' அழகு மல்லிகை
'நேத்து ராத்திரியின்'
"தந்தையர் நாடென்று" என்று தாய் நாட்டை என் பாடினார் பாரதி ????
படிப்பில் உயர்வான் என்பர், படித்தபின்! படிப்பால் வரும் பணத்தால் உயர்வான் என்பர், பணமுமானவனாய் அவன் ஆன பின்! பாதியாய் ஒருத்தி வந்தால் இவன் உயர்வான் என்பர், பாதியின் பார்வையில் பதியானபின்! பாதியும் பாதியும் இணைந்து உருவாக்கிய ஜோதி வந்தால் இவன் உயர்வான் என்பர், ஜோதியாகிய வாரிசு வந்தவுடன், இவனே "என்பராகி" இவன் வாரிசை "படிப்பால் உயர்வான்" என்று தொடங்கி தொடர்வான்... life cycle 🤔 "யாக்கையில் யானே யாரென்று தெரியா பதரை, ஐயோ இவன் மனிதனென்பர்" 😂😂
பார்த்த திரைப்படத்தை மற்றொரு முறை பார்க்க பிடிக்காத இந்த மனிதன், வாழ்ந்த வாழ்க்கையை மறுமுறை வாழ நினைக்கும் மனிதன்?????? ஏன்???
நம் நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 17 லட்சத்தி 54 ஆயிரம் கோடி. இதில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மட்டும் 14 லட்சத்தி 95 ஆயிரம் கோடி, மீதம் 2 லட்சத்தி 59 ஆயிரம் கோடி 5, 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகள்/காசுகள்.
சராசரியாக நபர் ஒருவர் நாள் ஒன்றுக்கு 2000 ருபாய் செலவு செய்தாலும், 125 கோடி பேர்களுக்கும் நாள் ஒன்றுக்கு 2 லட்சத்தி 50 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே தேவை. வருமைக்கோட்டின் மேல் உள்ள 30 சதவீத பேர்களும் சராசரியாக 25 ஆயிரம் ரூபாய்களை (பணமாக) வைத்திருப்பதாக பார்த்தால் கூட 7 லட்சத்தி 50 ஆயிரம் அவரவர் வீடுகளில் அவசர செலவுக்காக வைத்திருப்பதாய் எண்ணிக்கொள்ளலாம்
நம் நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 17 லட்சத்தி 54 ஆயிரம் கோடி. இதில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மட்டும் 14 லட்சத்தி 95 ஆயிரம் கோடி, மீதம் 2 லட்சத்தி 59 ஆயிரம் கோடி 5, 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகள்/காசுகள்.
சராசரியாக நபர் ஒருவர் நாள் ஒன்றுக்கு 2000 ருபாய் செலவு செய்தாலும், 125 கோடி பேர்களுக்கும் நாள் ஒன்றுக்கு 2 லட்சத்தி 50 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே தேவை. வருமைக்கோட்டின் மேல் உள்ள 30 சதவீத பேர்களும் சராசரியாக 25 ஆயிரம் ரூபாய்களை (பணமாக) வைத்திருப்பதாக பார்த்தால் கூட 7 லட்சத்தி 50 ஆயிரம் அவரவர் வீடுகளில் அவசர செலவுக்காக வைத்திருப்பதாய் எண்ணிக்கொள்ளலாம்
மாற்றி யோசித்து
மறுக்கப்பட்ட சிந்தனை...
மாற்றி யோசிக்காததாலேயே
மறக்கப்பட்ட சிந்தனை
மலைகளையும் மரங்களையும்
மாற்றியமைத்து மார்தட்டிக்கொள்ளும் காலம்
மாற்றம் தேவை என்பதை மறந்து
தேவையே மாற்றம் என்றாகிவிட்ட கோலம்
மாறியது மனிதன் என்றால்
மண்ணாவது மிஞ்சும்
மாறுவது மனிதம் என்றால்
எங்குள்ளது தஞ்சம்
அளவு கடந்த ஆசையின் எல்லை
மாறிக்கொண்டே இருக்கும் மனதின் தொல்லை
பாவம்தான் இந்த மாறிவிட்ட மனிதன்
பம்பரமாகிவிட்டதையும் மறந்து,
சாட்டையைதானே மாற்றுகிறான்
ஏறினால் ஏற்றுவதும்
வாரினால் தூற்றுவதும்
அந்த நாலு பேரின் நியாயம்....
ஏற்றினாலும் தூற்றினாலும்
ஏறிவா என்பதே
ஏறிவிட்டவர்களின் வாதம்...
ஏற்றத்தில் ஏமாற்றமும்
இறக்கத்தில் தடுமாற்றமும்
இணைந்தேதான் இருக்கிறது...
ஏறியவன் பாதையும் வேண்டாம்,
இறங்கியவன் போதையும் வேண்டாம்...
அப்படியே விட்டுவிடுங்களேன்,
சமநிலை சமத்துவத்தில்,
மனிதம் மலரட்டும்
கதாபாத்திரம்: இராணுவ வீரனாக நானிருந்து விடைபெற்றால்....
இரயில் மறையும்வரை
தூவானத்திற்க்கு மத்தியில் தூரிகையாய்
தெரிந்த உனது உருவம்...
வான் துளி கிளப்பிய
மண்வாசனையுடன் கலந்த
உன் விழித்துளி கிளப்பிய உன் வாசணை...
சொல்ல முடியாத சோகங்களை
உள்ளடக்கி, சிரிக்க முயன்று தோற்றுப்போய்
சுழிந்த உன் உதடுகள்...
கண்மணியே, உன் கையசைவின்
வேகத்தில் கிழிந்த காற்று,
என் முன் இருக்கும் தடைகளை
தகற்த்தெறிந்திறுக்கும்...
கட்டாயம் வருவேன், உன் கரம் பிடிக்க
காத்திரு கண்ணே, காலம் நம் காதல் கோலத்தில்
வண்ணமிடும்...