கருப்புப்பணத்தின் எச்சம் கள்ளப்பணம்
நம் நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 17 லட்சத்தி 54 ஆயிரம் கோடி. இதில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மட்டும் 14 லட்சத்தி 95 ஆயிரம் கோடி, மீதம் 2 லட்சத்தி 59 ஆயிரம் கோடி 5, 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகள்/காசுகள்.
சராசரியாக நபர் ஒருவர் நாள் ஒன்றுக்கு 2000 ருபாய் செலவு செய்தாலும், 125 கோடி பேர்களுக்கும் நாள் ஒன்றுக்கு 2 லட்சத்தி 50 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே தேவை. வருமைக்கோட்டின் மேல் உள்ள 30 சதவீத பேர்களும் சராசரியாக 25 ஆயிரம் ரூபாய்களை (பணமாக) வைத்திருப்பதாக பார்த்தால் கூட 7 லட்சத்தி 50 ஆயிரம் அவரவர் வீடுகளில் அவசர செலவுக்காக வைத்திருப்பதாய் எண்ணிக்கொள்ளலாம். அப்படியென்றால் வங்கிகள் முதல் கருவூலங்கள் வரை, ஒவ்வொரு நாள் முடிவிலும் கையிறுப்புப்பணமாக 7 லட்சத்தி 54 ஆயிரம் கோடி இருக்க வேண்டும் இல்லையா? ஆனால் இந்த அளவு 3 லட்சம் கோடியை கூட தாண்டாத நிலை எப்படி வந்தது?
கொலைகளுக்கும், வன்முறைகளுக்கும், தீவிரவாத செயல்களுக்கும், லஞ்சத்திர்க்கும் என்று பல வழிகளில் எந்த ஒரு கனக்கிலும் வராமல் இங்கு சுற்றிக்கொண்டிருக்கும் இந்த "உபரி"ப்பணம் உண்மையில் ஒரு சாமனியனை எப்படி பாதிக்கிறது.
1. விளைந்த நிலம், விளையும் நிலம், குளம், குட்டை, கூடு, வீடு, காடு என்று எது கிடைத்தாலும் குறைந்த விலையில் பதிவு செய்து, அதிக விலை கொடுத்து வாங்குவர். இதனால் சிறிது சிறிதாக சேமித்தி தனக்கென வீடு வாங்க நினைக்கும் ஒரு சாமானியனால், நகரத்திர்க்கு மிக அருகில் என்று 100 கிலோ மீட்டர் தள்ளிதான் தனக்கென ஒரு வீட்டை வாங்க முடிகிறது. சமயத்தில் அதுவும் முடிவதில்லை.
2. நட்சத்திர ஹோட்டல் விருந்து எப்பவாவது என்ற நிலை மாறி, எப்பொழுதும் என்றாகிவிட்டது. இந்த ஹோட்டல்களின் சிறப்பு அம்சமே, எதையும் கரண்டியில் தர மாட்டார்கள், சட்டியில் தான் தருவார்கள். பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் வைத்திருக்கும் கூட்டம், ஏனோ உணவை கொஞ்சமாகத்தான் சாப்பிடும். விளைவு, நிறைய நிறைய உணவு குப்பைக்கு செல்கிறது. இதனால் ஏற்படும் காய்கறி மற்றும் தானியங்களின் தட்டுப்பாடு, விலையேற்றம் என்று ஒரு சாமனியனையே பாதிக்கிறது.
3. பெரிய பெரிய வீடுகள், பன்ணை வீடுகள், விருந்தினர் மாளிகைகள் என்று கட்டி முடித்து, மின் விளக்குகள், மின்சார சாதனங்கள் என்று காண்போரை மிரள வைக்கும் இந்த "உபரி"ப்பணம் மின்சாரத்தையும் மிரளத்தான் வைக்கிறது. விளைவு மின் தட்டுப்பாடு, ஒரு கையில் விசிறியுடன், இன்னொறு கையில் குழந்தையுடன் சாமானியன்.
20% பேர்கூட வருமான வரி கட்டாத நம் நாட்டில், வங்கிக்கனக்கு கூட இல்லாமல் 2 வாரத்தில் 4000 ரூபாய்களை செலவழித்து அது பத்தவில்லை என்று கஷ்டப்படும் சாமனியன் எங்கிருந்து புதிதாய் முளைத்து வந்தான்???? கூலிக்கு வங்கியில் க்யூவில் நிற்கும் கூட்டம் எப்படி சாமானியனாகும்??? ஒரு 500 ரூபாய்க்கு சில்லறை கிடைத்தாலே, ஒரு சாமனியன் ஒரு வாரத்தை ஓட்டிவிடுவானே??? வருமானத்தில் சிலவற்றை காட்டாமல் விடுவது கருப்புப்பணம், வருமானத்தையே காட்டாமல் விடுவது கள்ளப்பணம். ஒரு திருடன், ஒரு டாக்டர்.. இந்த இருவருக்கும் வரி காண்பிப்பதில் உள்ள வேற்றுமையே, இது எப்படி என்பதாகும். ஒரு டாக்டர் தான் வாங்கும் பணத்தில் ஒரு பகுதியை கணக்கு காண்பித்து, மற்றொரு பகுதியை தானே வைத்துக்கொள்வது கருப்புப்பணம், ஒரு திருடன் தான் திருடிய எதையும் கனக்கு காண்பிக்க முடியாமல், அனைத்தையும் தனதாக்கும் முயற்சி கள்ளப்பணம். கருப்புப்பணம் நாட்டை விட்டு செல்லாது, கள்ளப்பணம் உலகெல்லாம் செல்லும். நடப்பது கருப்புப்பணத்தை ஒழிப்பதற்க்கான முயற்சி, இது பயனிக்கும் பாதையை தெளிவாக பார்ப்போம்:
திருடன் அதிகாரத்தில் இருந்தால்?????
1) கருப்புப்பணத்தை பதுக்குகிறவர்கள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாகவே பதுக்கிறார்கள். அதாவது 15 லட்சம் கோடிக்கு மேல் புழகத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை எப்படி ரிசெர்வ் வங்கி மாற்ற முடியும் என்ற கேள்விக்கு, உண்மையில் 15 லட்சம் கோடி 500, 1000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததா என்றால் "நிச்சயம் இல்லை" என்பது நம்மில் பலருக்கும் தெரியும். இந்த 15 லட்சம் கோடியில், வெறும் 5 லட்சம் மட்டுமே அதிக பட்சம் புழக்கத்தில் இருக்கும். மீதம் 10 லட்சம் கோடியும் அரசியல்வாதிகள் முதல் ஆசிரியர்கள் வரை அவரவர் வீட்டில் பதுக்கப்பட்டிருக்கும். அந்தப்பணம் வேறு வகையான லஞ்சத்திற்க்கோ, பில் தராத வணிகத்திர்க்கோ (தங்கம், வீடு, நிலம்) பயன்படும், கொலை, குண்டுவெடிப்பு மற்றும் ஓட்டு வாங்கக்கூட பயன்படும். இப்பொழுது இந்த 500 மற்றும் 1000 செல்லாது என்ற அறிவிப்பினால், இந்த 15 லட்சம் கோடியில் பெருமளவு ஏதாவது ஒரு வகையில் கனக்கில்/புழக்கத்தில் வரும். வந்தால் வரியும் வரும், நாட்டிற்க்கு வருமானமும் வரும். வரி என்பது வருமானவரி மட்டும் இல்லை, 2 ரூபாய் பஸ் டிக்கெட்டில் கூட 20 பைசா வரி நாட்டைச்சேரும்.
2) மின்னனு வர்த்தகத்தில் நடைபெரும் எந்த குற்றங்களும் எதாவது ஒரு சூழ்நிலையில் எவருக்காவது தெரிந்துவிடும், ஆனால் பணமாக ஒருவர் வாங்கும் லஞ்சப்பணம் அவர் வீட்டுக்கு சென்று படுக்கையை புரட்டும் வரை தெரிவதில்லை. அப்படி எத்தனைபேர் படுக்கையை புரட்டுவது??? ஆரம்பப்பள்ளி முதல் ஆஸ்பத்திரி வரை, அனைத்தும் மின்னனு வர்த்தகமானால், இங்கு கனக்கில் வராத பணம் என்று எது இருக்கும்??? வெளிநாடு செல்லும் கள்ளப்பணம் கூட ஏதாவது ஒருவகையில் யாராவது எப்படியாவது கண்டுபிடித்துவிடலாம், ஆனால் உள்ளே சேரும் கருப்புப்பணம்தானே நமக்கு முதல் எதிரி????
மொத்ததில் 500, 1000 நோட்டுகளை திரும்ப பெற்றுக்கொள்ளும் முயற்சி, பனக்காரர்கள், லஞ்சப்பேய்கள், அதிகார அடிக்ட்டுகள் வீட்டிலும், தோட்டத்திலும், அவுட் ஹௌசிலும் முடங்கிக்கிடக்கும் நிதியை வெளிக்கொண்டுவரும். மின்னனு வர்த்தகம், இனி புதிதாய் கருப்புப்பணம் சேர்வதை குறைக்கும். உள்ளே நிறைய கிடைத்தால்தானே, வெளியில்/வெளிநாடு கொண்டுசெல்ல கள்ளப்பணம் கிடைக்கும், ஆகையால் கருப்புப்பணம் குறைந்தால், கள்ளப்பணம் குறையும். சிந்தியுங்கள். செயல்படுங்கள். உழைத்தவனுக்கு கிடைக்க வேண்டிய எல்லா மதிப்பும், ஊரை உலையில் போடுபவனுக்கும் கிடைக்கும் நிலையை மாற்றிடுங்கள். சாமனியனை கேடயமாக்கும், சந்தர்ப்பவாதிகளின் சாட்டைக்கு சறுக்கி விடாதீர்கள். வரிசை ஒன்றும் நமக்கு புதிதல்லவே, இன்று நமக்காக என்று போராடும் எத்தனை பேர், ரேஷன் கடையில் நம்முடன் நின்றார்கள்?? பஸ் பாசுக்கும், டிக்கட்டுக்கும் நின்றார்கள்?? பிரச்சாரம் என்று கூலிக்கு அழைத்து சென்று, தண்ணீர் கூட கொடுக்காமல் இறந்துபோன எத்தனை பாவங்களுகாக மனிதச்சங்கிலி அமைத்தார்கள். சிந்தியுங்கள், தயவு செய்து இப்போதாவது சிந்தியுங்கள். சாமனியன் என்று நம்மளை கேடயமாக்கி, கேடுகள் செய்யும் யாரையும் மன்னிக்காதீர்கள். காவிரிக்கு சேராமல், கரன்ஸிக்கு சேரும் கட்சிகளை நம்பாதீர்கள்.
மக்களை ஏமாற்றியது போதும் அரசியல் வியாதிகளே, உங்கள் பணத்தை எறித்துகூட குளிர்காயுங்கள் ஆனால் எங்களில் சில பேர்களின் ஆசையை பயன்படுத்தி உங்கள் "உபரி"ப்பணத்தை மாற்ற எங்களின் வங்கி வரிசையை பெரிதாக்காதீர்கள். பின் "மக்கள் துயரம்" என்று நீலிக்கண்ணீரும் வடிக்காதீர்கள்.
ஆ. மயில்வாகனன்
தென்காசி