★★பிடல் காஸ்ட்ரோ★★

*பிடல்_காஸ்ட்ரோ மரணம்!*

*செவ்வானம்_இருண்டு_விட்டதோ...?*

ஏகாதிபத்தியத்தை
வீழ்த்தி; மக்கள் விடுதலையை கட்டியமைத்து; புரட்சிகர கியூபாவை உருவாக்கிய மாவீரன் பிடல் காஸ்ட்ரோ இன்று இறந்து விட்டார் என்ற செய்தி கிடைத்தப் போது, உடலில் மின் அதிர்வு ஏற்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.

புரட்சியாளன் சேகுவேராவுடன் இணைந்து, கியூபாவின் பாடிஸ்டா சர்வாதிக்கார அரசுக்கு எதிராக அவர் நடத்திய வீரஞ்செறித்த போர்களங்கள் வரலாறு பாராட்டும் செய்திகளாகும்.

ஏகாதிபத்திய அரசுகளின் வஞ்சக சதிகளை முறியடித்து; உலகம் பாராட்டும் வகையில் அவர் உருவாக்கிய புரட்சிகர கியூபா அரசு; ஒடுக்கப்பட்ட மற்றும் வளரும் நாடுகளுக்கு நம்பிக்கையை ஊட்டியது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் புரட்சி தீயை பரப்பியது. ஏகாதிபத்திய அமெரிக்காவை குலை நடுங்க செய்தது.

வல்லாதிக்க அமெரிக்காவின் அருகில் ஒரு குட்டி தீவாய் இருந்து கொண்டு, வாஷிங்டனின் ஈரக்குலையை நடுங்க செய்த பெருமை பிடல் காஸ்ட்ரோவை சாரும்.

பாலஸ்தீன மக்களுக்காகவும், உலகெங்கிலும் விடுதலைக்காக ஏங்கிய தேசிய இனங்களுக்காகவும் அவர் காட்டிய ஆதரவு மகத்தானது.

ஏகாதிபத்திய நெருக்கடிகளை தாண்டி, கியூபா மக்களுக்கு வேலை, உணவு, கல்வி, மருத்துவம், சுகாதாரம், நியாயமான வருவாய் ஆகியன கிடைக்கும் வகையில் அவர் ஆற்றிய அரசியல் - சமூக சேவைகள் உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
ஆசிய _ஆப்பிரிக்க நாடுகளுக்கு நம்பிக்கை ஊட்டின.

உலகின் சர்க்கரை சின்னமாய் திகழும் கியூபா,
இன்று கண்ணீரில் மூழ்கியிருக்கிறது. தனது அன்பு தந்தையை இழந்து துடிக்கும் கியூபா மக்கள்

தென் அமெரிக்க கண்டத்தின் செவ்வானம் இன்று இருண்டிருக்கிறது.
பிடல் காஸ்ட்ரோ இறந்திருக்கிறார். ஆனால் அவரது புரட்சிகர பயணம், உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களாலும், உரிமை கேட்கும் தேசிய இனங்களாலும், உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தாலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பதில் ஐயமில்லை.!

கண் எதிரில் கியூபா
என்ற திவாலான
நாட்டை கட்டமைத்து
நூறு சதவீத கல்வியறிவு..
இருபது மாணவருக்கு
ஒரு ஆசிரியர்...

மிக மிக முன்னேறிய
மருத்துவ வசதிகள்...
தேவையான விகிதத்தில்
மருத்துவர்கள்...

கரும்பு விளைச்சலில்
புரட்சி...எரிபொருள்
பயன்பாட்டில் புரட்சி...

அமெரிக்காவின் தடைகளை தகர்த்து
எறிந்து...
ரஷ்யாவுடன் கைகோர்த்து
வளமையான...
வலிமையான..
கியூபாவை கட்டமைத்து
உயிர்பிரியும்வரை
பதவி ஆசையில்லாமல்
முதுமையில் மரணத்திருக்கிற
காஸ்ட்ரோ..நிச்சயம்
உலகில் வாழும்...
தலைவர்களுக்கு...ஒரு
முன்னுதாரணம்...!

*வாழ்க_பிடல்_காஸ்ட்ரோவின்_புகழ்*!

///////////////////////////////////////
நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல...
அப்புறம் ஏன் இந்த பதிவு...??
தன் ஏழை நாட்டை தனிமனிதனாய் சுயநலமின்றி போராடி உயர்த்தி காட்டிய உண்மையான போராளி..!

எழுதியவர் : முகநூல் (26-Nov-16, 11:11 pm)
பார்வை : 373

சிறந்த கட்டுரைகள்

புதிய படைப்புகள்

மேலே