சிவா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சிவா |
இடம் | : படுக்கபத்து,தூத்துக்குடி |
பிறந்த தேதி | : 23-Mar-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Jan-2016 |
பார்த்தவர்கள் | : 855 |
புள்ளி | : 158 |
வாழ்வில் எந்த நிலைக்கு போனாலும்....rnஇருந்த நிலையை என்றும் மறக்க மாட்டேன்.....
கவிதை எழுதுவதற்கு ஏதேனும் தகுதிகள் ஏதேனும் இருக்கிறதா ?
இன்றைய காலத்தில் யாருக்கு அதிக மனஅழுத்தம்
உள்ளது ?
தெளிவு படுத்துங்கள்... உறவுகளே
என் தங்கையிடம்
காதலிக்ககூடாது...
என்று சொல்லிவிட்டு
நான் காதலிப்பது தான்
ஆணாதிக்கமா?
போதி மரத்தின் கீழ் அமர்ந்தேன்
புத்தனாகவில்லை !
ஆல மரத்தின் கீழ் அமர்ந்தேன்
ஞானி ஆகவில்லை !
மீதி மரங்களின் கீழெல்லாம் அமர்ந்தேன்
எந்தத் தெளிவும் பிறக்கவில்லை !
சாலையோரத்து மரங்களின் நிழழ்ல்களில்
தென்றலுடன் கை கோர்த்து நடந்தேன் ...
கவிஞன் ஆனேன் !
-----கவின் சாரலன்
கன்னியாகுமரி மாவட்டம் வள்ளியூர் அருகே
சுண்ட விளை கிராமம் .அன்று கிராமமே! திருமண கோலம் போட சத்தம் இன்றி நடந்து முடிந்தது அவளின் திருமணம். வாழ்க்கையின் நாட்கள் ஒட தொடங்கினர்
மனித பிறவிக்கே உரியதான தொடர் பிரசவ சத்தம். வருடங்கள் உருண்டோட கனவனின் குடியின் விரீயமும் அதிகரித்தது. இரவு உணவு நாளைய விடியலை பொறுத்தது. காலை சூரியன் அவர்களின் வயிற்றை நிரப்புகிறது. இரவு சோறு விடிவதற்குள் உணவாகிறது எறும்பிற்கு. தினம் தினம் அடி உதை இன்னும் எத்தனையோ! சித்தரவதைகள் தாங்க முடியாத பெண்மை உயிர்த்தெழுந்தது கண்னகி உருவத்தில்.
இரவோடு இரவாக வெளியேறி விட்டது அந்த பெண் தெய்வம் தோளில் மூன்று பிள்ளை நிலாக்களை சுமந்த
வான் மகள் அள்ளி தெளிக்கும் வெள்ளை பூ தான் நீ
மண் தொட்டதும் மனம் கமல்கின்றாயே....
வெள்ளி கம்பிகள் நீ வீசும் போதெல்லாம்
சிரித்து வாங்கும் மரங்கள் இங்கு உண்டு
தெறித்து ஓடும் மனிதர்களும் உண்டு....
உன்னுடன் நீ அழைத்து வரும் அந்த அழகு பூங்காற்று
உனக்கும் முன் ஓடி வந்து தழுவி செல்லும்....
கண்முடி உன்னை ரசித்தால்
வெள்ளை காகிதம் எல்லாம்
கவிதையாய் நீ இருந்தாய்....
குடை கூரை கொண்டு உன்னை நான் தடுக்கும் போதெல்லாம்
காலின் மேலே தவழ்ந்து ஓடி செல்வாய்...
துளி துளியாய் உன்னை கண்ணத்தில் ஏதும் போதெல்லாம்
ஒரு நொடியில் நீ இடுவாய்
வளர்க்கும் நாய்க்கு
இல்லத்தில் தனியறை
வளர்த்த தாய்
இருப்பதோ தெருமுனை
இரவின்-ஒளியிலே
நிலவாய் வெண்பனியாய்
சிரிக்கும் பெண் நிலவே
இனி தினமும் எனைக்கொல்லும்
பேரழகே
நீ அசையும் அழகினில்
புது அகிலமும் தோன்றுமடி
உன் கொலுசின் சினுங்களில்
என் இதயம் விழித்ததடி
இதழ் சிரிப்பினில் விழி பறித்தாய்
இமை எங்கிலும் நீ நிறைந்தாய்
விழிகள் இணையும் நேரம்
விலகி செல்வது ஏனடி
இனி தொடங்கும்
இந்த ரயில் பயணம்
இனிதே முடியட்டும்...
இனி எப்போது பார்பேன்
இரவின் ஒளியில் என் நிலவை.....
முதல் முதலாக
விழிகளால்
அவள்...
எழுதிய காதல் கடிதத்தில்
நிறைந்தே இருந்தது...
நிசப்தம்...
நீ என் கண்படத் தொட்டெறிந்த
பொருட்கைளை எல்லாம் சேகரித்து வருகிறேன்...
என் இதயத்தை தவிரி.
எறிந்த இடம் தேடி அலைந்துகொண்டிருக்கிறேன் இன்றுவரைக்கும்......
ஏனடி பெண்ணே என்னைக் கைவிட்டாய்........ தாங்கமுடியவில்லை
என்னவளே...
நான் இதுவரை ஓவியம்
தீட்டியதில்லை உனக்கும் தெரியும்...
எதோ முயற்சித்தேன்
உன்னை வரைந்துவிட...
என் ஓவியத்திற்கு
தொடக்கமும் தெரியவில்லை...
ஓவியத்திற்கு
முடிவும் தெரியவில்லை...
எந்த ஓவியனின் கைகளையும்
நம்பி இருக்க நான் விரும்பவில்லை...
நீயும் விரும்பமாட்டாய்
எப்போதும்...
உன் மனதின் எண்ணம்
எனக்கு தெரியுமடி...
என் உள்ளம்
உனக்கு புரியாதா...
என் உணர்வுகளை வண்ணம்கொண்டு
தீட்ட முயற்சித்தேன்...
எந்த வண்ணம் கொண்டு
உன்னை தீட்டுவது...
உன் விரல் தொட்டு
காட்டிவிட்டு செல்லடி...
என் இதயத்தில்.....
அழியாத காயம்
மருந்தில்லாத வியாதி
நீர்
அருந்தியும் தீராத தாகம்
இரு மனதின் சுவாசத்தில்
வாழும் ஜீவன் காதல்
என்னவளுக்கு பெயர்
வைக்க
கடவுள் எழுதினானா?
பூக்களின் அகராதியை;
அவள்
அவ்வளவு அழகில்லை
அவளை
விடயழகு யாருமில்லை
கன்னி
நடந்தால் மண்ணிலுள்ள
எறும்புக்குக் கூட வலிக்காது
புன்னகை
முத்துக்களை சிந்தினால்
பூக்களும் ரசிகனாகும்
இதழ் விரிக்காமல் பேசும்
அவள் பாஷை
காட்டு மூங்கில் புல்லாங்குழலின்
மெல்லிசைக்கு ராகமாக கேட்கும்.
அழகாய் பிறந்த
மலர்களெல்லாம் நினைத்ததாம்!
மருதாணி இலையாக பிறந்து
உதிர்ந்திருந்தால்
அவள் ரேகைகளில்
மருதாணி பூவாய் பூத்திருக்கலாம்