அம்பை மட்டுமல்ல உன் இதயத்தையும் தான் --முஹம்மத் ஸர்பான்

அழியாத காயம்
மருந்தில்லாத வியாதி
நீர்
அருந்தியும் தீராத தாகம்
இரு மனதின் சுவாசத்தில்
வாழும் ஜீவன் காதல்

என்னவளுக்கு பெயர்
வைக்க
கடவுள் எழுதினானா?
பூக்களின் அகராதியை;
அவள்
அவ்வளவு அழகில்லை
அவளை
விடயழகு யாருமில்லை

கன்னி
நடந்தால் மண்ணிலுள்ள
எறும்புக்குக் கூட வலிக்காது
புன்னகை
முத்துக்களை சிந்தினால்
பூக்களும் ரசிகனாகும்
இதழ் விரிக்காமல் பேசும்
அவள் பாஷை
காட்டு மூங்கில் புல்லாங்குழலின்
மெல்லிசைக்கு ராகமாக கேட்கும்.

அழகாய் பிறந்த
மலர்களெல்லாம் நினைத்ததாம்!
மருதாணி இலையாக பிறந்து
உதிர்ந்திருந்தால்
அவள் ரேகைகளில்
மருதாணி பூவாய் பூத்திருக்கலாம் என்று

அவளை நினைத்து
கண் மூடினால் கனவெனும்
புதுயுலகம் காண்கிறேன்
நிஜத்தில் கூட
என்னோடு
பேசாதவள் கனவிலும் மனதில்
அம்பால் குத்துகிறாள் .

என்னுயிரே!
அம்பை பற்றிப் பிடிக்காதே!
உன் விரல்களை சீண்டிடலாம்
என் மனதுக்குள்
புதைத்து விட்டு போ
அம்பை மட்டுமல்ல
உன் இதயத்தையும் தான்..,

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (21-Mar-16, 5:39 pm)
பார்வை : 82

மேலே