கடவுள் வாழ்கிறான்

அறம் தவறிய வரிகளையோ
பெண்களை தாழ்த்தும் சிந்தனைகளையோ
சமூக பிரிவினைவாதத்தையோ
என் எழுதுகோல் ஒருபோதும் எழுதுவதில்லை
ஆகவே என் கவிதையில்
கடவுள் வாழ்கிறான்...

பெண்ணியம் போதிக்கும்
பெண் சிறார்களை மதிக்கும்
கலை கலாச்சாரத்தின்
மாண்பை போற்றும்
உழவனின் உழைப்பை
வணங்கும்
இயற்கையை காக்கும் கடமை
என் வரிகளில் உள்ளது ஆகவே என் கவிதையில் கடவுள் வாழ்கிறான்...

கடவுள் இல்லையென்ற வாதத்தை பரப்பும் சிந்தனையாளர்களின்
வழிநடப்பவன் நான்
ஆனாலும் என் கவிதையில் கடவுள் வாழ்கிறான்...

கடவுளை நிந்தித்ததில்லை சந்தித்திருக்கிறேன்
தாயாக தந்தையாக
நல் ஆசானாக
நற்பண்புள்ள நண்பனாக
அறம் செய்ய விரும்பும்
குடிமகனாக
ஆகவே என் கவிதையில் கடவுள் வாழ்கிறான்...

*✍🏿செல்வா*

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (17-Jul-25, 8:59 am)
Tanglish : kadavul valkiran
பார்வை : 17

மேலே