ரிதன்யா

ரிதன்யா !

சிறை மீண்ட பின்னும்
சீதைக்குத் தீக்குழி !

துகிலுரிந்த பின்னும்
துரௌபதிக்கு வனவாசம் !

இன்னும் ஐநூறு கோடி
ஆண்டுகள் கடந்தாலும்

ரிதன்யாக்களுக்குத்
தற்கொலையே
தாரக மந்திரம் - இது
மானுடத்தின்
மகத்தான அவமானம் !!

-யாதுமறியான் .

எழுதியவர் : யாதுமறியான். (16-Jul-25, 3:08 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 28

மேலே