மழை

வான் மகள் அள்ளி தெளிக்கும் வெள்ளை பூ தான் நீ
மண் தொட்டதும் மனம் கமல்கின்றாயே....

வெள்ளி கம்பிகள் நீ வீசும் போதெல்லாம்
சிரித்து வாங்கும் மரங்கள் இங்கு உண்டு
தெறித்து ஓடும் மனிதர்களும் உண்டு....

உன்னுடன் நீ அழைத்து வரும் அந்த அழகு பூங்காற்று
உனக்கும் முன் ஓடி வந்து தழுவி செல்லும்....

கண்முடி உன்னை ரசித்தால்
வெள்ளை காகிதம் எல்லாம்
கவிதையாய் நீ இருந்தாய்....

குடை கூரை கொண்டு உன்னை நான் தடுக்கும் போதெல்லாம்
காலின் மேலே தவழ்ந்து ஓடி செல்வாய்...

துளி துளியாய் உன்னை கண்ணத்தில் ஏதும் போதெல்லாம்
ஒரு நொடியில் நீ இடுவாய் ஓராயிரம் முத்தம்
அழகாய் வடித்தோடும் உன் அழகு முத்தம்...

குடையெல்லாம் மறந்து போய் உன்னை கொண்டாடும் என் மனம்
மொட்டை மாடியில் உன்னுடன் நான் நனைந்த பொழுதுகள்
இவர்கள் தான் நான் எழுத மறந்த என் கவிதை....

அழைக்கும் போதெல்லாம் நீ அனைத்து கொண்டால்..
இங்கு புன்னகைக்கும் இதழ்கள் ஆயிரம் ...
உனக்கு நன்றி கூறும் இதயமோ நூறாயிரம் ...

எழுதியவர் : நான் (31-Oct-17, 5:00 pm)
சேர்த்தது : Kavitha
Tanglish : mazhai
பார்வை : 137

மேலே