இறுதி நாள்

கடைசி வரை தெரியவில்லை
இன்றே எனக்கு இறுதி என்று
சோகத்தில் வாடுகிறேன்
சாயம் பூசி சிரிக்கின்றேன்...

இங்கு வந்து ஏன் சேர்ந்தேன்
பிரிவு செய்த தவத்தாலோ? ...
காலம் சென்ற காலங்களின்
கல்லறை என் மனந்தானோ? ...

அகதியாய் இங்கே வந்துவிட்டேன்
ஆறுதல் சொல்ல யாருமில்லை
அம்மா சொல்லும் தெம்பிருந்தால்
உந்தி சோகம் தீர்த்திடுவேன்....

வழிகள் யாவும் அடைத்திருக்கு
வாசல் மட்டும் திறந்திருக்கு
வெளியே சென்று உள் பார்த்தால்
நிழல் மட்டும் அங்கே நின்றிருக்கு...

நாளை இங்கே நான் வருவதில்லை
இன்றே இங்கு இறுதி என்பேன்
என் சொல்லாலே யாரும் காயப்பட்டால்
பின்னாலே நானும் வருந்தியிருப்பேன்...
யாரேனும் அதனை மறவாதிருந்தால்
இன்றோடு எனை மன்னித்தருள்க.....

சோகத்தை மூட்டை கட்டி
நெஞ்சிலே ஏற்றி விட்டேன்....
முகம் மேலே ஸ்டிக்கர் ஒட்டி
என் சிரிப்பை விற்று விட்டேன்....

நெஞ்சிலே கனமிருந்தால்...
கண்ணீரே அது காட்டும் கண்ணாடி..
கண்களும் கடைசியிலே
நடிக்க எங்கு கற்றதடா....

விழிமூடும் போதும்
இந் நினைவே திரும்ப வருது
இதுவென்ன நோயா?
கவலையுன்னு பெரா?
காலம் தான் மருந்தா?
சிறுக சிறுக குறைய
சிறிது காலம் பொறுப்பேன்....
பா.முருகன்

எழுதியவர் : (31-Oct-17, 8:11 am)
பார்வை : 612

மேலே