A JATHUSHINY - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : A JATHUSHINY |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : 10-Oct-1997 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 16-Jun-2017 |
பார்த்தவர்கள் | : 687 |
புள்ளி | : 268 |
என்னைப் பற்றி சொல்ல பெரிதாகவும் இல்லை சிறிதாகவும் இல்லை.
என் வாழ்க்கையில் நான் எதிர் பார்த்தது எதிர்பார்க்காதது எல்லமே மாறுகின்றது... போலியான உறவுகளையும் நிரந்தரமில்லா உறவுகளையும் நம்பி, பாசத்தை அளவு கடந்து கொட்டி நேசித்து ஏமாந்து போகின்ற (ஏ)மாற்றத்ததை தவிர...
நினைவுகள் கூட
நிரந்தரமில்லாத நிழல் நான்.......
வரியில்லா கவிதை
நான்......
சிறகில்லா பறவை
நான்....
வழியில்லா பாதை
நான்..........
நீ நடந்த பாதை
கடந்த காலமானாலும்
அறியாமல்
தேடுகிறது விழிகள்
இன்றும்
உன் பாத சுவடுகளை
நீ இல்லா என் உள்ளம் ஆகும்,
குன்றில் இரவை போலே
நீயின்றி வாழாது என் மனம்
அன்றில் பறவை போலே
அன்பே
இரவினை வருடிச் சென்று
இமைகளை திருடிக் கொண்டு
இன்னும் தூங்கவில்லையா என்று
துணிந்து "நீ" என்னிடத்தில் கேட்டால்
காயம் கண்ட இந்த கண்களால்
பதில் பேச முடியுமா...!!
உன் சிரிப்புக்கும் அழுகைக்குமான
திறவுகோலை அடுத்தவரிடம் கொடுத்துவிட்டு
பூட்டிற்கு திறவுகோல் இல்லையெனில்
வீட்டை திறப்பது எப்படி என்பதுபோல்
வாழ்வை திறக்க வழியின்றி
வருந்தும் வையகத்து மானிடரே
அன்பின் உரமிட்டு ஆத்தும செடிவளர்
பிரிகின்ற கிளைகளெல்லாம்
அடுத்தவர் அபகரிக்கா
பரிசுத்த திறவுகோல் படர்ந்துவிடும்
இப்போது நீ நினைத்தால் சிரி
நீ நினைத்தால் அழு
உன் வாழ்வு திறந்து நீ அங்கு இல்லாது போவாய்
மறந்தும் மற்றவனிடம் கொடுத்துவிடாதே
உன் வாழ்வின் திறவுகோலை
இல்லையேல் உன் சுயம் அழுகிவிடும்
தன் அன்பை உரிமையாகக் கெண்டவனிடம்....
அவனுக்காகவே அவைனை மட்டுமே அவன் நினைவோடே அவன் நினைவுக்காகவே வாழ்ந்துகொண்டு உண்மையாக தன் உயிரை விட மேலாக நேசித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை அந்த உரிமைக்குரியவன் சந்தேகம் கொண்டால் அந்த பெண்ணின் மனனிலை எவ்வாறு இருக்கும்...?
அக்டோபர் 16 இன்று உணவு தினம்....
காதல் வந்த வழி..
காயம் தந்த வலி..
இரண்டுமே உந்தன் விழி ...
உன்னருகே இருந்ததில்லை..
உன் குரலை கேட்டதில்லை ..
உன்னுடன் பேசியதில்லை..
ஆனால்
உன்னுடனே வாழ்ந்து வந்தேன் ..
உனக்கே தெரியாமல் ...
என் காதல்
மதத்தினால் மண்ணானதோ?
சாதியினியால் சாம்பலானதோ?
என்னை பிடிக்காததால் பிணமானதோ? ..!
கொஞ்சம் நீ மதித்திருந்தால்
என் காதல் ஊனமாய் இருந்திருக்கும்..
கெஞ்சியும் நீ மிதித்ததால்
உரு தெரியாமல் உயிர் விட்டதோ?..
அம்புக்குறி அறிவிப்பை நம்பி ...
அட்டவணையின்படி திட்டமிட்டு ...
ஒத்திகை ஓராயிரம் பார்த்த நேரத்தில் ..
கொஞ்சம் ஒப்பனை செய்திருந்தால்
ஏற்றிருப்பாயோ என் காதலை? ...!
பணமின்
நாம் ஒருவரை காதலிக்கும் போது அவர் ஏமாற்றமாட்டார் என்று ஒரு துளி கூட நினைக்காது விடத்து காதலில் ஏமாந்து தோற்று நிற்கிறோம் அந்த நிலையில் உங்கள் வலி யாதாக இருக்கும்... வலியை அனுபவிக்கும் நபர் என்று எண்ணி உங்கள் மனதில் தோன்றுவது யாது?
நாம் ஒருவரை காதலிக்கும் போது அவர் ஏமாற்றமாட்டார் என்று ஒரு துளி கூட நினைக்காது விடத்து காதலில் ஏமாந்து தோற்று நிற்கிறோம் அந்த நிலையில் உங்கள் வலி யாதாக இருக்கும்... வலியை அனுபவிக்கும் நபர் என்று எண்ணி உங்கள் மனதில் தோன்றுவது யாது?
பகலெல்லாம் கனவோடு கலக்கிறேன்
நீயில்லா தனிமைகளில்...
இரவல்லாம் கண்ணீரோடு
கரைக்கிறேன் வலிமிகுந்த நேரங்களை......
கதறி அழுகிறேன் உன்
காதலுக்காய் அனுதினமும்...
கண்ணீரில் என் காதல்
கரைந்து காணாமல் போவது கூட தெரியாமல்...
இரு இதயங்கள் ஒன்றாகித் துடிக்கின்ற நிலைதான் காதல்.....
அது நமக்காக துடிப்பதோடு; நம் காதலுக்காவும் துடிக்கவேண்டும்...
துடிக்கிறேன் நிதமும் உனக்காக
நான்.....
துடிக்கும் இதயமெல்லாம் என்றோ ஒருநாள் தவிக்கவிடப்படும் என்பதை அறியாமல்......
தவிப்புடன்,
அ.ஜதுஷினி.