தொலைந்த்த காதல்

காதல் வந்த வழி..
காயம் தந்த வலி..
இரண்டுமே உந்தன் விழி ...

உன்னருகே இருந்ததில்லை..
உன் குரலை கேட்டதில்லை ..
உன்னுடன் பேசியதில்லை..
ஆனால்
உன்னுடனே வாழ்ந்து வந்தேன் ..
உனக்கே தெரியாமல் ...

என் காதல்
மதத்தினால் மண்ணானதோ?
சாதியினியால் சாம்பலானதோ?
என்னை பிடிக்காததால் பிணமானதோ? ..!

கொஞ்சம் நீ மதித்திருந்தால்
என் காதல் ஊனமாய் இருந்திருக்கும்..
கெஞ்சியும் நீ மிதித்ததால்
உரு தெரியாமல் உயிர் விட்டதோ?..

அம்புக்குறி அறிவிப்பை நம்பி ...
அட்டவணையின்படி திட்டமிட்டு ...
ஒத்திகை ஓராயிரம் பார்த்த நேரத்தில் ..
கொஞ்சம் ஒப்பனை செய்திருந்தால்
ஏற்றிருப்பாயோ என் காதலை? ...!

பணமின்றி பண்பாய் இருந்ததாலோ...
மாயம் செய்யாமல் நியாயம் செய்ததாலோ..
ஒளிந்து நடிக்காமல் தெளிந்து நடந்ததாலோ..
சவப்பெட்டியில் சடலமானதோ?
என் காதல் ...

காரணம் தெரியாமல் களவும் போனதே..
காணிக்கை உண்டியல் வேடிக்கை ஆனதே ?!

ஆண்டுகள் பல கடந்த போதும்
ரணம் இன்னும் ஆறவில்லை...
காட்சிகள் பல மாறியபோதும்
கண்களின் சாட்சியம் இன்னும் மறையவில்லை!!

மதம் பிடித்த யானையாய்..
மது அருந்திய போதையாய்..
தடம் தொலைத்த சிறுவனாய்..
உனை தேடியே தொலைகிறேன்..!!

எல்லோரிடத்தும் அமிர்தம் தந்து
என்னிடத்தில் மட்டும் அமிலம் தெளித்தாய் ஏனோ?!

பிறிதொரு ஜென்மம் பிறந்து வந்தாலும்
பிரிவு மட்டும் தருவாயோ?...
பாவம் ஐயோ பைத்தியம் என்று
பரிவும் கொஞ்சம் தருவாயா ?!!..

ஆயுதம் தொலைத்த படை வீரனாய்..
உன் அன்பை தொலைத்த சிறு பிள்ளையாய்....
வலிகளை சொல்ல வார்த்தை இல்லாமல்
வாழ்க்கையும் வலியாய் ஆனதே !

எழுதியவர் : குணா (16-Sep-18, 10:13 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 360

மேலே