எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அக்டோபர் 16 இன்று உணவு தினம்.... இன்றய காலகட்டத்தில்...

அக்டோபர் 16  இன்று உணவு தினம்....

இன்றய காலகட்டத்தில் உணவு தட்டுப்பாடு ஒரு பிரச்சினையாகத்தான் உள்ளது...

உங்களுக்கெல்லாம் ஒன்று தெரிமா? 
எனது அம்மாவின் சின்ன வயசு பருவத்தில.
அவங்க சாப்பாடு என்ற ஒரு அத்தியவசிய விடயத்திற்கு அவங்க பட்ட கஷட்டத்த சொன்னாங்க பாருங்க அப்பா.....
அந்த நேரத்தில அவங்களுக்கு சரியான கஷ்டமாம் சாப்பாட்டுக்கும் கூட.....
அம்மாவும் அம்மாக்கு ஒரு சகோதரனுமாம் குடும்பத்தில எண்ணிக்கை குறைய இருந்தாலும்.... ரொம்ப கஷ்டமாகத்தான் இருந்திச்சாம்...
ஸ்கூல் விட்டு வந்தால் சாப்பிட எதுவும் இல்லயாம்..... 
ஒரு நீர்த்தாவரமான ஒல்லித்தாவரம் அதனுடைய காயில் வந்து விதைகள் அரிசி போன்ற உள்ளீட்டைக் கொண்டிருக்குமாம் அதை எல்லாம் சேகரித்து சோறாக சமைப்பாங்களாம் அதை ஒல்லிச் சோறு என்றுதானாம் சொல்லுவாங்க... அதுக்கு தயிர் விட்டு சாப்பிட்டா ரொம்ப சுவையா இருக்குமாம் இப்படி.... எல்லாம் சாப்பிட்டிட்டுட்டான் வளர்ந்தாங்களாம்...... ஆனால் ஒன்று உணவுக்கு கஷ்டமாக இருந்தாலும் கஷ்ட்டத்தில சாப்பிட்ட சாப்பாட்டு எல்லாம் அவங்களுக்கு  போசாக்கான உணவாகத்தான் இருந்திருக்கும் என்பதில் உறுதி. 
இப்பாேதைய உணவுகள் அனேகமானவை நஞ்சுதான்...

அதை எல்லாம் இப்ப நினைக்கும் போது எங்க காலத்துல எங்களுக்கு இந்த கஷ்ட்டஙள் வரவில்லை  எனும்போது.. மகிழ்ச்சிதான்.... அவங்களோட ஊக்கம் முயற்சி இருந்ததால.. வசதியாக உள்ளோம்....

ஆனா இந்த கால கட்டத்தில உணவுகள் அநாயவசியமாக விரையம் செய்யப்படுகிறது.
உணவுப்பொருள் ஒன்றை உற்பத்தி செய்வதிலிருந்து நுகர்வு வரைக்குமாக பல இழப்புகள் ஏற்படுகிறது....
அதிலும் பார்த்தால் உணவுகளை அலங்கரிப்பதற்கு என்று சில உணவுகளை நாம் விரையம் செய்கிறோம்...
எத்தனையோ பேர் இன்று உண்ண உணவில்லாம இறந்து கொண்டிருக்காங்க...
ஏன் நாம் இவற்றை கவனத்தில் கொள்ளக்கூடாது....

இயன்ற அளவில் விரையங்களை குறைத்து உற்பத்திகளை அதிகரிக்கும் ஒரு உந்து சக்த்தியாக நாம் யாவரும் செயற்பட வேண்டும்..
என்று என் மனசுல பட்ட இன்ரென்சன சொல்லுரன்.
தவறுகள் ஏதும் விடப்பட்டிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.


பதிவு : A JATHUSHINY
நாள் : 16-Oct-17, 9:06 pm

பிரபலமான எண்ணங்கள்

அதிகமான கருத்துக்கள்

பிரபலமான எண்ணங்கள்

மேலே