எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

‘கானல்’ கரை... சந்தித்த தருணத்தில்... நட்பாகி... எந்த பாதையிலும்......

‘கானல்’ கரை...

சந்தித்த தருணத்தில்... 
நட்பாகி...
எந்த பாதையிலும்... 
எந்த நொடியிலும்...
விட்டு விடாமல்...
தொட்டு...தழுவி... 
நகர்ந்தன
நாட்கள்... நலமாய்... 

நிழல் கூட... 
நின்று கொண்டது..
நெருக்கம் கண்டு...
நம் இணக்கம் கண்டு...

காலங்கள் கடந்தன...
கரைந்தன நினைவுகள்...
கலைந்தன... 
கனவு காட்சிகள்...
கரையை தழுவ 
அலையாய்...
அடித்து... பிடித்து....
அயர்ந்தே போனேன்...
பின்னால் தள்ளி.. தள்ளி..
பிரிந்தே போனேன்..
பின்பே உறைத்தது...
கானல் ‘நீர்’...
மட்டுமல்ல...
கானல் ‘கரை’யும்...
உண்டென்று...   

தேடி அலைந்தது...
தழுவி கொள்ளும்..
கரையல்ல...
கரைந்து போகும்...
மணல் என்று...

நீ இல்லை என்றால்...
நான் இல்லை என்றது...
உனக்காக நான் என்றது...
எல்லாமே...
அரிதாரம் பூசாத...
அழகான நடிப்பா?...

கடைசி நொடி வரை...
நம்பியிருந்தேன்...
நலம்...காக்க...
என் மனம் நோக்க...
நீ வருவாய் என...

என் கைபேசி...
கதறியது.. காணவில்லை...
என்று...
எத்தனை நாட்கள்...
நகர்ந்தன... 

நலம் விரும்பிகள்...
நட்பு விரும்பிகள் ...
என்று பலரும் வந்து...
கை கோர்த்தனர்...
பகிர்ந்து கொண்டனர்...
அறிந்து கொண்டனர்..
விளங்கி.. சென்றனர்.
அன்பின் ஆழத்தை.. 
அப்போதும் அணுகவில்லை...
உன் மூச்சு காற்றும்...கூட,..

அவசர காலத்தில்..
ஆறுதல்..அளிக்க..
துணிவின்றி...
அமைதி காப்பதும்..
அவலம்தானே...
அளவில்லா
என்.. அன்புக்கு...

வருத்தங்கள் வற்றி 
போய்...
வழிந்த கண்ணீர் 
வற்றி...போய்...
வழி தடங்கள்...
வலுவான பின்...
வந்தாய்...
தெரியாத என்..
இல்லத்திற்கு...
வழி கேட்டு....

வந்தாயே என்று...
மனதில் தோன்றிய...
வண்ணங்களை.....
வழித்தெறிந்தது...
வந்த...
செய்தி..

நீயாக வந்திருந்தால்...
நிஜம் நீ என்றிருப்பேன்...
மன காயத்திற்கு...
மருந்திட...
மருத்துவர்...
சொல்லி
“மற்றும் ஒருவர்”...
எடுத்துரைத்த பின்தான்..
மனம் வந்ததோ உனக்கு...
பிறர் சொல்லி வருவதில்லை...
நேசமும்... பாசமும்...

சம்பிரதாய..
சந்திப்பிற்கு
நன்றி... உனக்கு...
நலம் எதுவும் புரிந்ததில்லை...
உனக்கு நான்..
புரிய வைத்தாய்...
புதிதாய்.. எனக்கு..

கழுவி விடு...
காதல்.. அரிதாரத்தை..
அகற்றி.. விடு..
அன்பு.எனும் ஆயுதத்தை...
வீழ்வது போகட்டும்
வீணன் என்னோடு..

விட்டு விலகி...
நடுக்கடலில்... இப்போது...
எந்த சலனமும் இன்றி...
அந்தகாரத்தில்...
ஊழி காற்றின் ஓசையில்...
குனிந்து பார்க்க நேரமில்லாத...
கடற் பறவைகள் மேலே.. மேலே..
அவ்வப்போது சுற்றும்..
சுறாமீன்களும்...
திமிங்கலங்களுமாய்...
எழும்ப.. இயலாத...
சிற்றலையாய்.. நான்.. 

நாடகமே உலகம்.
பயிற்றுவித்தாய்...
நன்றி பல...
நடுக்கடலே...
போதும் எனக்கு....

என்னை சேரும்...
நினைவிருந்தால...
விட்டு...விலகி....
தொட்டு தழுவி.... 
விளையாடும்...
கரை சேரா...
அலைகளை.. பார்..
நினைவிருந்தால்.......
தெரியும்...
என் முகம்,,,,

ஓரமாய்..
கிடக்கும்...
ஓடங்களின்...
நடுவே..
தேடி.. பார்..
தேடியலைந்த,...
தெளியாத..
இதயம்..
புதையுண்டு...
கிடக்கும்...

மதிக்க... 
வேண்டாம்..
மிதிக்காமல்..
கடந்து..
செல்...

கரை...என்று...
நினைத்து
கட்டாந்தரை..
தேடிய..
களைப்பில்..
நடுகடல்
நோக்கியே...
இனி ்..
பயணங்கள்......
- ஆனந்த். வி.  .

பதிவு : நட்பே நலமா
நாள் : 17-Oct-17, 3:15 am

மேலே