எண்ணம்
(Eluthu Ennam)
நட்பிற்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம்... ஆனால் நட்பை இழக்காதே.........
இணைந்த கைகளை போல இதயமும் இணைந்தது, நட்பின் இலக்கணம் படிக்க இமைகளும் திறந்தது சுவாசிக்க காற்றை தந்தவன் தோல் மீத (...)
பூக்களுக்குத் தெரியாது!!
நட்பு
என் நட்பு
நட்பினை நாடி நதிப்போல்
நாடெங்கும் நடமாடும்
நண்பன் நான்..
நடந்தேன் நடந்தேன் நாட்களெல்லாம்
ஏனோ நடக்கவில்லை
நான் நினைத்தது....
நினைத்தேன் நட்பு நல்குமென்று
நினைவாக நிற்கின்றது
நெஞ்சத்தில் நிரைவேராமல்...
நட்பினை நாடும் நண்பன் நான்
நகமென்று நினைத்து நீக்கிய
நண்பர்கள் பல...
நட்பை நாடுவது நப்பாசையாம்
நண்பர் நற்கூற்று நல்கினார்
அதுவோ,
நட்பினை நாடாதே..
நட்பினை கேட்டறிந்து வாங்காதே....
தானாக நட்பு வரவேன்டுமென்று....
நற்கூற்றானது மனதை
நாசமாக்கியது அன்று
நாடவில்லை நாடமாட்டேன்
அந்நட்பினை அன்றிலிருந்து....
தனிமையில் ...பிறகு
ஒரு நாள் பாலைவனத்தின் கழுகுக்கு
கானல் நீர் கிடைத்தது
கழுகுக்கு தெரியாது ஓராண்டிற்கென்று..
தெரிந்தால் பழகியிருக்காது....
நட்பெனும் தாகத்தை தனிக்க
நண்பனெனும் குளம் கிடைத்தது..
தூய்மையான நட்பு .....
கண்களில் கண்ணீர் கசிகிறது
கண்களுக்கு தெரியாமல்
ஏனோ,
கண் விழித்து உலகை பார்த்த
தினம் உனக்கு,
வாழ்த்து கூற முடியவில்லை என்பதாலா...........
அல்ல,
உன் நட்பானது
என்னிடம் இல்லை என்பதாலா...
தெரியவில்லை எனக்கு,
கண்ணீரில் குளித்தேன் இன்று....
நட்பு என்ற கடலில் மூழ்கி
கனவு என்ற முத்தை எடுக்க வேண்டும் என்று
அலை போன்று நான் செல்ல முத்தாக இருந்தது
என் உயிராக இருக்கும் என் ஆருயிர் நண்பன்
முத்தாக இருந்த உன்னை கண்டதும் எனக்கும்
உன் கூடவே சிற்பியாய் இருந்திட ஆசை தோன்றியது.....
By....
VMS