நட்பே நலமா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நட்பே நலமா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 192 |
புள்ளி | : 17 |
நட்பும் நடிப்பா? இன்பம் இறப்பில்தானா?
இரண்டு நாட்கள்
நானும் அவளும்
பார்த்துக் கொள்ளவுமில்லை...
பேசவுமில்லை...
துடித் துடித்தன கண்கள்...
எப்படி துடித்திருப்பாளோ?...
அனலாய் கொதித்தது நெஞ்சம் ......
மலரும் நினைவுகள்
மனதை வருட
என்னவள் விழிகள் மூடி
எனை நினைத்தே
ஏங்கியிருப்பாள்......
செடியில்
இதழ் பூத்து
சிரிக்குமவள்...
செம்மலாய்
முகம் கொண்டிருப்பாள்......
பார்க்கும்
திசை எங்கும்
நான்தானென்று
பாவை நெருங்கியிருப்பாள்...
பார்த்தது கானல் நீர்...
பார்த்த விழிகளில்
கண்ணீர் சிந்தியிருப்பாள்......
கருத்த
வான் முகில் நான்...
ஏக்கத்தில்
பூமி அவள்...
மழையென வந்து
அவள்
நெஞ்சம் நனையப் போகிறேன்......
இளமை இதயத்தில்...
அன்பு அனைவரிடமும்..
குறுஞ்சிரிப்பு...
குறுகுறு பார்வை...
தீப்பொறி கோபம்..
தீண்டினால் இன்பம்..
நட்பிலே நாட்டம்..
நகைச்சுவை நாளும்...
காதல் கண்ணன்...
கண்மணி அவள் கண்ணில்...
இழப்புகள் பல...
பிழைகள் பல...
இயல்பாய் வாழ்க்கை
நட்பு, நாட்டம்...
அன்பு, பாசம்...
காதல், நேசம்...
நெகிழ்வு...
வானவிலாய் ..
வர்ணஜாலம்..
காட்டியது... வாழ்க்கை
நலமாய் சென்ற..வாழ்வு
நடுவில் நின்றது..
புற்றாய் பரவி..
புரியாமல் நின்றபோதே
உயிர் உண்டு..
என்.. உயிர் உண்டு..
சென்றது புற்று நோய்...
நடு இரவில்...
களவாணி காலன்..
கவர்ந்து விட்டான்
இன்னுயிரை...
ஆத்மா.. அலைந்த
கடைசியில்
கங்கையில் மூழ்கி எழுந்து
புனிதம் ஆகிவிட்டோம்
என்ற நிம்மதியில்
கங்கைக் கரையினில் நடந்தாள் வேசி !
பல வேசிகளைப் புணர்ந்து
வாழ்நாளெல்லாம் இன்பம் துய்த்து வாழ்ந்தவன்
கங்கையில் மூழ்கினான்
வேசி என்று விதி அமைத்து
வேசியருக்கு வீதியும் அமைத்து
பெண்களுக்கு இழிவு செய்யும்
உன்னைப் போன்றோர்
ஆயிரம் முறை மூழ்கி எழுந்தாலும்
உங்களுக்கு விமோசனம் இல்லை
என்று சொல்லி
தன்வழி நடந்தாள் கங்கை !
~~~கல்பனா பாரதி~~~
நட்புகள்
விற்பனைக்கு அல்ல!
சொல்ல
வேதனை உண்டு.
சொல்லாவிடில்
இதயம்
காயத்தில்
இரணமாகிவிடும்.
இன்று சிறிய காயம்.
நாளை பெரிதானால்
மருந்திட யாரைத் தேடுவது?
மௌனியாக நட்பு
நிற்கும் போது!
பார்வையில்
உறவானாய்.
பாசத்தில்
உயிரானாய்.
எவரோ
சொன்னதை
வைத்து
என்னைப் பிரித்து
எடைக்குப் போட்டாய்.
மரக்கிளையில்
ஓடிடும்
அணில் பிள்ளை
தவறி உயரத்திலிருந்து
கீழே விழுந்து
உணர்வற்றுக் கிடப்பது போல
நான் கிடக்கிறேன்.
எதற்கு நமக்குள்
பிரிவு என்று
விடை தேட
படைக் கொண்டு போக
நாம் விரோதிகள் அல்லவே.
இன்று
கோழிக்குஞ்சு என
சிறகடித்து
வெளியேற முயற்சித்தேன்,
தாயெனக் காப்பாய் என்ற
நட்பு
நான் விழும் போது
தாங்க வேண்டும்
நான் விழுவேனோ என
காத்திருக்க கூடாது
கழுகின் பார்வை
நட்புக்கு அழகு அல்ல
கருணையின் பார்வை தான்
நட்பு....
நீ
என் மீது கல் எறிந்ததில்
கவலை இல்லை
நேராக எறியவில்லையே
என்ற வருத்தம்...
நீ
கட்டபொம்மன்
என்ற நினைப்பு தான்..-ஆனால்
எட்டப்பன் சபை காரன்
ஆனது எப்போது ?
நட்பை சொன்னவன் நீ-
களங்கத்தை நீயா
எற்படுததுவது...
நான் வாலி இல்லை தான்
நீயாவது ராமனாக
இருந்திருக்கலாமே.....
நான் செய்த தவறு என்ன ?
உன்னில் என்னை கண்டதா?
உனக்கு கூட்டம் உண்டு
பதவி உண்டு
ஒன்றுமே இல்லாமல்
நிற்கும் நான் எப்படி
உன் போட்டியாளன் .....
எப்போதும்...என்றும்...
என் நினைவலைகள்...
புரண்டு...எழும்போது...
காலடியில் வந்து உரசி...
கிளர்ச்சியூட்டும்...
என் முதல் முத்த...
நினைவுகள்....
சரியாய் இடம் பார்த்து...
பெரிதாய் திட்டமிட்டு...
களவாடியதல்ல...
என் முதல் முத்தம்...
தற்செயலாய் நடந்த..
தவிர்க்க இயலாத...
தனிமை தருணம்...
இனிக்கும் இளமை தருணம்...
இதழ்கள் இப்படியும் இயங்குமா?
வியந்து... வியர்த்து...
நடுங்கி... நாணமுற்று...
நன்மையா... தீமையா...
கொடுத்தேனா? பெற்றேனா?
தெரியாமல் திண்டாடி...
முடிந்த பிறகோ...
திரும்ப வேண்டும்...
திரும்ப.. திரும்ப வேண்டுமென்ற..
தித்திக்கும் ஸ்பரிசம்....
பற்றி இழுத்து
நட்பு
நான் விழும் போது
தாங்க வேண்டும்
நான் விழுவேனோ என
காத்திருக்க கூடாது
கழுகின் பார்வை
நட்புக்கு அழகு அல்ல
கருணையின் பார்வை தான்
நட்பு....
நீ
என் மீது கல் எறிந்ததில்
கவலை இல்லை
நேராக எறியவில்லையே
என்ற வருத்தம்...
நீ
கட்டபொம்மன்
என்ற நினைப்பு தான்..-ஆனால்
எட்டப்பன் சபை காரன்
ஆனது எப்போது ?
நட்பை சொன்னவன் நீ-
களங்கத்தை நீயா
எற்படுததுவது...
நான் வாலி இல்லை தான்
நீயாவது ராமனாக
இருந்திருக்கலாமே.....
நான் செய்த தவறு என்ன ?
உன்னில் என்னை கண்டதா?
உனக்கு கூட்டம் உண்டு
பதவி உண்டு
ஒன்றுமே இல்லாமல்
நிற்கும் நான் எப்படி
உன் போட்டியாளன் .....
அவன் கோபம் புரியவில்லை..
அவன் சோகம் புரியவில்லை...
ஆதங்கமாய்...
புலம்பிய தாயை
புதுமையாய் பார்த்தேன்
பதினைந்து வயது..
அவள் தனயனுக்கு...
பதினைந்து வருடங்கள்...
புரிதல் இல்லாமல்....
ஒரு தாயா?
இயந்திர வாழ்வில்
இல்லாமல் போனது...
பாசமா? பரிவா?
இல்லை தாய்மையேவா?
புரியாமல் பார்த்தேன்...
அழையா விருந்தாளியாய்...
அவள் அகம் சென்று...பார்க்க..
அவள் குழந்தை.. தெய்வ குழந்தை..
என்றுணர்ந்து... தேம்பி நின்றேன்...
மூளை தன் வளர்ச்சியில்..
சற்றே குறைய...
வாழ்க்கை... முற்றும்...
தொலைந்தது...
தெய்வ...குழந்தைக்கு..
தொலைந்து போன உணர்வுகளோடு...
கரைந்து போன மனதோடு...
உள்ளில்
அள்ளிய சாக்கடையை விட
அதிகம் நாறியது;
புறக்கணித்த
சமூகத்தின் மௌனம்
விழிகளின் அகிலத்தில் முத்துக்களின் ஜனனம்
இமைகளின் அருகில் பட்டாம்பூச்சிகளின் சலனம்
கோதையவள் நெஞ்சத்தின் வாசல்கள் அழைக்கிறது.
நுழைந்ததும் கனவின் அறைகள் சிறை பிடிக்கிறது
விழிகளின் அகிலத்தில் முத்துக்களின் ஜனனம்
இமைகளின் அருகில் பட்டாம்பூச்சிகளின் சலனம்
கோதையவள் நெஞ்சத்தின் வாசல்கள் அழைக்கிறது.
நுழைந்ததும் கனவின் அறைகள் சிறை பிடிக்கிறது