முதல் முத்தம்

எப்போதும்...என்றும்...
என் நினைவலைகள்...
புரண்டு...எழும்போது...
காலடியில் வந்து உரசி...
கிளர்ச்சியூட்டும்...
என் முதல் முத்த...
நினைவுகள்....

சரியாய் இடம் பார்த்து...
பெரிதாய் திட்டமிட்டு...
களவாடியதல்ல...
என் முதல் முத்தம்...

தற்செயலாய் நடந்த..
தவிர்க்க இயலாத...
தனிமை தருணம்...
இனிக்கும் இளமை தருணம்...

இதழ்கள் இப்படியும் இயங்குமா?
வியந்து... வியர்த்து...
நடுங்கி... நாணமுற்று...
நன்மையா... தீமையா...

கொடுத்தேனா? பெற்றேனா?
தெரியாமல் திண்டாடி...
முடிந்த பிறகோ...
திரும்ப வேண்டும்...
திரும்ப.. திரும்ப வேண்டுமென்ற..
தித்திக்கும் ஸ்பரிசம்....
பற்றி இழுத்து..
பதமாய் சுவைக்க...
ஈர முத்தம்...
இதமாய் படரும்...
என்று எண்ணி..
ஏமாந்தேன்...

பனி பூவுக்குள்...
ஒளிந்து இருந்த..
வெப்ப எரிமலை...
வெடித்து சிதறியது..
சுட்டு பொசுக்கியது...
காதலும்... காமமும்...
கலந்த கலவை...
இளமை தீயாய்...
எரிந்தது...
ஏந்திழை இதழ்களில்...

மீண்டும் .. மீண்டும்..
இதம் கேட்டு...
அடம்.. பிடித்தது ..
சின்ன குழந்தையாய்..
என் அலைபாயும் மனது...

தாங்கி பிடிக்க ..
தாவி வந்தாள்...
தளிர் நடையாள்...
பிரிய மனமில்லாமல்...
பித்தாகி போனேன்...

நேரம் நின்று போனது...
யுகங்கள் உருண்டன...
உலகம் உறைந்து நின்றது...
காலங்கள்... அனைத்தும்...
கட்டவிழ்ந்து,,, தாறுமாறாய்...
ஒரு நொடியில்
ஒன்றாய் நின்றன...
மூளை சற்றே...
ஓய்வெடுக்க...
முரட்டு காமம்...
முட்டி மோதியது...
திசைகள் நான்கும்...
திரையிட்டு மறைத்தன...
பிரியாத இதழ்களை...
பிரிக்க... பிரியமில்லாமல்...
சன்னல் வழியே...
சலவை நிலா...
சத்தமின்றி பார்த்து...
சபலம் கொண்டது...
தென்றல் காற்று..
தேடி வந்து சாமரம் வீச...

எல்லை மீறும்..
உணர்வலைகள்...கரை கடக்க...
விதிர்த்து விலகினாள்...
பதிந்த தடத்தோடு,
இதழ் மறைத்து...
பறந்தோடினாள்...
பச்சை கிளி அவள்...

நெஞ்சில் காயத்தோடு...
நெருப்பாய் நின்றேன்...
நேரிழை வருவாளா?
மீண்டும் வந்து...
நேசம் கொடுப்பாளா?

மீண்டும் வருமா?
இதழ்கள் பிணையும்...
இணையில்லா இறுக்கம்...
நெருப்பிலும் குளிரும் நெருக்கம்...

இளமையின் முதல் உணர்வு..
என் முதல் முத்தம்...

எல்லோருக்கும் இருக்கும்...
முதல் முத்தத்தின்..
நிழல் நினைவுகள்...
சுகமாய்... நிரந்தரமாய்...
நினைவலைகள் தளும்பும்போது...
தெறிக்கும்... சாரலாய்... ஆனந்த் வி

எழுதியவர் : nkavithai (29-May-16, 3:54 pm)
Tanglish : muthal mutham
பார்வை : 4496

மேலே