தன்வழி நடந்தாள் கங்கை
கடைசியில்
கங்கையில் மூழ்கி எழுந்து
புனிதம் ஆகிவிட்டோம்
என்ற நிம்மதியில்
கங்கைக் கரையினில் நடந்தாள் வேசி !
பல வேசிகளைப் புணர்ந்து
வாழ்நாளெல்லாம் இன்பம் துய்த்து வாழ்ந்தவன்
கங்கையில் மூழ்கினான்
வேசி என்று விதி அமைத்து
வேசியருக்கு வீதியும் அமைத்து
பெண்களுக்கு இழிவு செய்யும்
உன்னைப் போன்றோர்
ஆயிரம் முறை மூழ்கி எழுந்தாலும்
உங்களுக்கு விமோசனம் இல்லை
என்று சொல்லி
தன்வழி நடந்தாள் கங்கை !
~~~கல்பனா பாரதி~~~