ஊருக்கு வெளியே
===================
ஊர்க்காரார்காளால்
ஊருக்கு நன்மை என்று
ஊருக்கு வெளியே
ஒதுக்கி வைத்தபோதும்
ஒதுக்கி வைத்தவனே
அடைக்கலம் என்று வந்துவிட்டால்
ஊருக்குள் போ என்று
ஊர்க்காரர்களைப்போல்
ஒதுக்கி வைக்காமல் தன்னுள்
பதுக்கி வைத்துக்கொள்வதில்
மனிதர்களைவிட ஒருபடி
உயர்ந்து நிற்கிறது
மயானம்.
*மெய்யன் நடராஜ்