நன்மதி வெண்பா - நூல் - பாடல் 67
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
இகலாகா (தி)யாவரொடு மின்னலுற்ற பின்னர்
அகமலைத லாகா தவையில் - பகச்சொல்லல்
தக்கதன்று தன்னெஞ்சைத் தையலர்பா னன்மதியே
சிக்கவிட லாகாது தேர்! 67