திரு திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துக்கவி
திரு தொல். திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துக் கவிதை
அடித்தட்டு மக்களின் வாழ்வு வளம் பெறுமா ?
ஏழைக் குடிசைக்குள் வெள்ளி நிலா வலம் வருமா ?
அங்கே
அடுப்பில் உறங்கும் பூனையை விரட்டி அரிசிப் பானையினைத் தருமா ?
இறைவா இதுதான் இவர்களின் கருமா..
இப்படி ஏங்கிக் கொண்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்கள்
தன்நெஞ்சை நிமிர்த்தி நட்சத்திர உணவகத்தில் சாப்பிடுகிறான் மட்டன் குருமா
அதற்கு முதல் காரணம் தலைவர் திருமா
லட்சங்களை விதைத்து ஆடி காரில் (மகிழுந்தில்)செல்பவர் அல்ல நீங்கள்
லட்சியங்களை விதைத்து அம்பேத்காரோடு செல்பவர் நீங்கள் ஆம்
மக்களை வெள்ளத்தில் நீந்த வைக்கும் தலைவர் அல்ல நீங்கள்
மக்கள் வெள்ளத்தில் நீந்தி வரும் தலைவர் நீங்கள்
தொண்டர்களை பள்ளத்தில் வைத்திருக்கும் தலைவர் அல்ல நீங்கள்
அவர்களை உங்கள் உள்ளத்தில் வைத்திருக்கும் தலைவர் நீங்கள்
சாதித் தலைவர் அல்ல நீங்கள்
அடித்தட்டு மக்களை படிக்கட்டில் ஏற்றி சாதித்த தலைவர்
ஆதித் தலைவர் அல்ல நீங்கள் ஆதிக்க வர்க்கத்திற்கு எதிராக போதித்த தலைவர்
திருவள்ளுவருக்கும் திருமாவளவருக்கும்
என்ன வித்தியாசம் தெரியுமா?
திருவள்ளுவர் தன்
குறளால் அகரத்து மக்களை சிகரத்தில் ஏற்றினார்
திருமாவோ தன் குரலால் அகரத்து மக்களை சிகரத்தில் ஏற்றியவர்
அது எழுத்திலிருந்து பிறந்த குறள் (ஓலைச்சுவடி)
( இது ஏழைகளின் பாதச் சுவடுகளில் )கழுத்தில் இருந்து பிறந்த குரல் 👌🏼
இருவரிடமும் அதி காரம் இல்லாத அதிகாரம் உள்ளது
தொல்காப்பியத்திற்குப் பிறகு திருக்குறள் பிறந்தது
தொல்காப்பியருக்குப் பிறகு
திருமாவளவன் பிறந்தார்
திருவள்ளுவருக்கு பிடித்தது பெரிய தாடி
திருமாவளவருக்கு பிடித்ததோ பெரியாரின் தடி
அவர் கையில் இருந்தது எழுத்தாணி
திருமாவே
அவர் எழுதிய எழுத்து தான் நீ 👌
அவர் ஒன்றரை அடியில்
மக்களை திருத்தினார்
நீங்கள் சிலரை ஒரே அடியில் திருத்துகிறீர்கள்
இவர் உயரத்திலோ சற்று *குள்ளல்* ஆனால் பிறர் துயரத்திலோ வாரி வழங்கும் வள்ளல்
தலாய்லாமா பிறந்த கணம் பிறக்கும் குழந்தையை அடுத்த தலாய்லாமா ஆகிறது திபத்தில்
நீங்கள் பிறந்த கணம்
எந்த வள்ளல் இறந்தானோ விபத்தில்