சாலையோரம் தேவதை போல வருகிறாள்

சோலையிளந் தென்றல்மென் பூங்காற்று வீசிட
மாலையின் மஞ்சள்பொன் வானம் விடைபெற
சேலையின் முந்தானை காற்றில் பறந்திட
சாலையோரம் தேவதை போல வருகிறாள்
நூலினும் மெல்லிய மெல்லிடை பூங்கொடி
பாலைநிலா நீயும் பொழி

---ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (19-Nov-24, 6:51 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 6

மேலே