இயற்கையின் வித்தியாசமான ஓவியங்கள்
அலைகளுக்கு என்றும்
அமைதியில்லை கடலில்
ஆனந்தம் ஆனால்
பௌர்ணமி நிலவில் ..
நிலவு வளரும் தேயும்
முழுநிலவாகும்
வளைந்த கோடான பின்னும்
ஓவியமாய் ஒளிரும் ..
மழைச் சாரலில் நனைந்தால்
மனதில் கோடை விலகி
குளிர்த் தென்றல் வீசும்
பாலை மணலில்
பதிந்த சுவடுகள்
நீர்குமிழிபோல் மறைந்து விடும்
தென்றலில் ஆடும் பூக்கள்
ஒருபொழுதினில்
ஒவ்வொன்றாய் உதிரும்
இரவின் மடியில்
மலரிதழில் துயிலும் பனித்துளிகள்
காலைக் கதிரொளியில் மறையும்

