பூங்காற்றே செல்லமாய் சொன்னாய்

பொழுதுபோகாத் தென்றலுன் கூந்தலிலே தங்க
அழுது புலம்பியது அந்திமலர்த் தோட்டம்
தழுவியது போதுமே தென்றலேயென் கூந்தல்
விழுமிய நின்கடமை வண்ணப்பூங் காவில்
பழுதிலா பூங்காற்றே செல்லமாய் சொன்னாய்
அழகு மலரெலாம் ஆரவாரம் செய்ய
எழுதினேன்நான் நின்னன்பை இங்கு !

---ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (19-Nov-24, 8:45 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 63

மேலே