நானின்றியா செய்வாய் கவிதை என்றாள்

பொய்யேந்தி நான்நிற்க பூக்களெனைப் பாடென்க
கைய்யை அசைத்துவான் தேன்நிலாஎன் னையென்க
பொய்யில் திளைத்திடும் பூங்கவிநா னின்றியா
செய்வாய் கவிதைஎன் றாள்

----பல விகற்ப இன்னிசை வெண்பா
கைய் ----ஏன் ஒருவிகற்பத்தில் ஏற்கப்படவில்லை
யாப்பார்வலர்கள் சொல்லலாம்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Nov-24, 10:50 am)
பார்வை : 53

மேலே