என்ன செய்யப் போகிறாய்?
❓❓❓❓❓❓❓❓❓❓❓
*என்ன செய்யப்*
*போகிறாய்?*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
❓❓❓❓❓❓❓❓❓❓❓
🌸பூக்கள்
உதிர்வதற்குள்
மணம் வீசி விடுகிறது...
🌙நிலவு
மறைவதற்குள்
கவிதையைக்
கொடுத்துவிடுகிறது....
🌧️மழை நிற்பதற்குள்
குளிர்ச்சியை
அளித்து விடுகிறது....
🌈வானவில்
மறைவதற்குள்
மகிழ்ச்சியை
நிறைத்து விடுகிறது.....
🌳மரம் விழுவதற்குள்
காய் கனி நிழல்
தந்து விடுகிறது....
💧ஆறு கடப்பதற்குள்
வளத்தை
கொடுத்து விடுகிறது...
👤மனிதனே !
நீ இறப்பதற்குள்
என்ன செய்யப் போகிறாய்....?
*கவிதை ரசிகன்*
❓❓❓❓❓❓❓❓❓❓❓