மின்விசிறி
உன்னைப் பார்த்து
சில நிமிடங்கள்
சுற்றி விட்டு
மயக்கத்தில் நிற்கிறேன்......
நீ மட்டும்
சுழன்று கொண்டிருக்கிறாய்...
சிறிதும் சளைக்காது
துளியும் மயக்கம் இல்லாது......
சிறகுகள்
இருந்தாலும்
பறந்து செல்லாது
தினம்
எனக்காய் நீ
ஓரிடத்திலே சுழன்று
சுகம் தருகின்றாய்......
இரவு முதல்
பகல் வரை
உனக்கு
ஓய்வு என்பதே இல்லை......
குளிர்காலம்
உனக்கு
விடுமுறைத் தந்தாலும்
கோடையில் நீ
இரு மடங்கு உழைக்கிறாய்
என் சுகத்திற்கே......
காற்று வீசும்
அந்தரத்து நண்பனே
உனக்காக
நான் ஒன்றும் செய்ததில்லை...
தூசுத் தட்டி
துடைத்து தான் வைக்கிறேன்.....

