இறுதி சுற்று

இளமை இதயத்தில்...
அன்பு அனைவரிடமும்..
குறுஞ்சிரிப்பு...
குறுகுறு பார்வை...
தீப்பொறி கோபம்..
தீண்டினால் இன்பம்..
நட்பிலே நாட்டம்..
நகைச்சுவை நாளும்...
காதல் கண்ணன்...
கண்மணி அவள் கண்ணில்...
இழப்புகள் பல...
பிழைகள் பல...
இயல்பாய் வாழ்க்கை
நட்பு, நாட்டம்...
அன்பு, பாசம்...
காதல், நேசம்...
நெகிழ்வு...
வானவிலாய் ..
வர்ணஜாலம்..
காட்டியது... வாழ்க்கை

நலமாய் சென்ற..வாழ்வு
நடுவில் நின்றது..
புற்றாய் பரவி..
புரியாமல் நின்றபோதே
உயிர் உண்டு..
என்.. உயிர் உண்டு..
சென்றது புற்று நோய்...

நடு இரவில்...
களவாணி காலன்..
கவர்ந்து விட்டான்
இன்னுயிரை...

ஆத்மா.. அலைந்து..
திரிந்தது ...
அன்பானவர்களின்
அருகில்...

நாட்டமுடன் கூடி நின்று..
நலம் வாழ...
கூட்டமாய் கூடி நின்று..
என் இன்பமே...இலக்காய்...
பசித்தால் பதறி...
துன்பத்திற்கு தோள் கொடுத்து...
உறவுக்கு உயிர் கொடுக்கும்..
நட்பு கூட்டம்..
உயிர் கொடி
அறுந்தது போல்...
ஆளுக்கொரு
மூலையில்
முடங்கி கிடக்க...
தட்டி கொடுத்து..
கட்டி தழுவ...
கரங்கள் துடித்தன..
கண்ணீர்தான் வந்தது...

“தாய்க்கு தலைமகன்
கொள்ளியிட..
தவமிருந்தேன்...
என் முதல்வன்..
என்னை...
முந்தி கொண்டானே!!

மலடி நான் அல்ல...
மண்ணுக்கு உணர்த்திய..
என் முதல் குல மகன்...
விண்ணகம் ஏக...
வீணில் நான் வாழ்வேனோ?”

கருப்பை கழன்று விழ..
கதறி அழுதாள்..
மரத்து போன நெஞ்சுடன்..
மாசிலா என் தாய்...

மகனின் மரணம்..
இடியாய் இறங்க,,,
வளர்ச்சி..கண்டு..
வனப்பு கண்டு...
வாலிபம் கண்டு...
வாலிபத்தில்.. தன்..
சாயல்...கண்டு...

விருப்பத்திற்கு விட்டு தந்து...
விளையாட்டாய்.. வாழ விட்டு..
தனியாய் வாழ...
துணையாய் நின்று...
மகனுக்காக...
விட்டு கொடுத்து... விட்டு கொடுத்து...
கடைசியில்..
காலனுக்கும் ..
விட்டு கொடுத்தான்..
வண்ண.. மகனை
வளமாய்.. வாழ...
வளர்த்தவனை..
புத்திர சோகத்தில்..
புழுவாய்.. துடிக்கும்..
என் தந்தை...

அண்ணாவென்று..
அங்கம் தடவி...
அலறி துடிக்கும்...
தங்கையை...
தலை கோதிட..
தவிக்க மட்டுமே...
முடிந்தது...

தந்தையின் தளர்வால்...
தகன பானை..
ஏந்தினான்.. என் தனயன்...
என் இளையன்...
தண்ணீர் ததும்ப...
கண்ணீர் தளும்ப...

அடித்தாலும்... பிடித்தாலும்...
அண்ணன் இவனென்று..
அருமையாய் சொல்வான்...
அயலாரிடம்....
உள்ளிருக்கும்
அன்பை காட்ட..
இருவருக்கும்
இதயம் இல்லை..
வெளிப்படுத்த...
இனியும் இல்லை..
இன்னுயிர் எனக்கு...

பானை சுற்ற சுற்ற ...
முதல் சுற்றில்...
முடிந்த ஜென்மத்தின்..
முடிச்சுக்கள்...
முற்றிலும்..
அவிழ்ந்தது...

இரண்டாம் சுற்றில்..
ஜென்ம...உறவுகள்..
விட்டு... விலக...

இறுதி சுற்றில்...
இயற்கை இரவல்..
தந்த இன்னுயிரை...
இயற்கைக்கே... அளித்தேன்
இளமையாய்...

பங்கெடுத்த
பஞ்ச பூதங்களும்...
பாலூற்றின...

பட படவென்று.
பறந்து, எரிந்தது,
செந்தீ...

ஒரே ஒரு கேள்வி..
மனதில் இன்னும் ...
என் உள்ளம் புரிந்து...
கொண்டாயா?
என் இறப்பு
உனக்கு போதுமா?
நீ மகிழ்ச்சியாய் வாழ?
நீ என் கண்ணை
உற்று நோக்கும்
ஒவ்வொரு நொடியும்...
செத்து பிழைத்து,
செத்து பிழைத்து .
சொல்லாமல்.
செத்தே போனேன் இன்று...
உன் கண்ணீரில்...
கரையட்டும்...
என் அஸ்தி...

என் கடைசி பெருமூச்சு..
வெளியேற துடிக்க...
விம்மி எழுந்தது...
விபரீதமாய்.. என் மார்பு...

“இந்த கட்டைக்கு ஆசை...
அடங்கவில்லை இன்னும்”
விவரமில்லா.. வெட்டியான்...
கட்டை எடுத்து..
நடு நெஞ்சில் அடித்து ...
நிறுத்தினான் கடைசி மூச்சை...

மண் பானையில்...
சுடு சாம்பலாய் நான்...
அவியாத எலும்புகள்...
அஸ்தியாய்...
கருப்பை நீரில்...
வளர்ந்து ....
கரைந்தேன்...கடைசியாய்..
கடல் நீரில்...

இனி...
ஆண்டுக்கு ஒரு முறை...
அன்ன உருண்டைக்காக...
அன்பு உருண்டைக்காக...
கரையும் காகமாய்...
காத்திருப்பேன்...
என் திவசமும்
எனக்கினி திருநாளே!!! –

மன்னியுங்கள்,,
மனதை திருக இல்லை..
இந்த கவிதை-

மரணத்தை வேறொருவர்..
வடிவத்தில் பார்க்க மனமில்லை எனக்கு
இன்பமில்லா இந்த கவிதை
எனக்கு மட்டுமே -ஆனந்த்.வி
.

எழுதியவர் : nkavithai (6-Jun-16, 12:02 am)
Tanglish : iruthi sutru
பார்வை : 200

மேலே