காதலுடன் - பாகம் 7

இரண்டு நாட்கள்
நானும் அவளும்
பார்த்துக் கொள்ளவுமில்லை...
பேசவுமில்லை...
துடித் துடித்தன கண்கள்...
எப்படி துடித்திருப்பாளோ?...
அனலாய் கொதித்தது நெஞ்சம் ......


மலரும் நினைவுகள்
மனதை வருட
என்னவள் விழிகள் மூடி
எனை நினைத்தே
ஏங்கியிருப்பாள்......


செடியில்
இதழ் பூத்து
சிரிக்குமவள்...
செம்மலாய்
முகம் கொண்டிருப்பாள்......


பார்க்கும்
திசை எங்கும்
நான்தானென்று
பாவை நெருங்கியிருப்பாள்...
பார்த்தது கானல் நீர்...
பார்த்த விழிகளில்
கண்ணீர் சிந்தியிருப்பாள்......


கருத்த
வான் முகில் நான்...
ஏக்கத்தில்
பூமி அவள்...
மழையென வந்து
அவள்
நெஞ்சம் நனையப் போகிறேன்......
காதலுடன்......

எழுதியவர் : இதயம் விஜய் (27-May-16, 1:49 pm)
பார்வை : 110

மேலே