உன்னோடு ஒன்றினேன்
உன்கண்கள் பேசுகின்ற
ஊர்தனிலே நானிருப்பேன்
பன்மொழிகள் காட்டுகின்றாய்
பாங்குடனே உன்னழகில் .
கன்னியுந்தன் காதலினால்
காண்கின்ற காட்சியினால்
என்மொழிகள் மறந்திடுதே ;
என்செய்வேன் சொல்லிடுவாய் .
முன்னுரையைச் சொல்லியுமே
முத்தான புன்னகையால்
நன்னெறிகள் ஊட்டுகின்றாய்
நாளுமுனைப் பாடுகின்றேன் .
உன்னதமாய் இவ்வுலகில்
உள்ளவளே ! நீவாழ்க !
உன்னோடு ஒன்றினேன் !
உன்னதமே ! வாழியவே !