படிக்க பிடிக்கும்

அதிரடி சமையல்

கேட்டால் ஆசையோடு
ரெடி ஆனது
சாப்பிடுங்கள் வைத்ததை !


எமன்

கடைசி கால் ஸீட்
பரிந்துரை பட்டியல்
காலத்தே வந்து விடும்
கவலை விடு

ஆசிரியர்

தெரிந்ததை
ஆண்டுக்கு ஆண்டு
மாறி மாறி வரவில் வைப்பார்
புது விருந்தாளி வியந்து கேட்க


மருத்துவர்

வந்த விவரம் சொல்லு
விலாசம் தர
இன்று போய் நாளை வா !

அடக்கம்

கச்சிதமா
கட்டில் மெத்தையை
கடத்தி வைப்பேன்
காரியம் முடிய …


நாணம்

பெண் அவள்
விழி அசைக்கா
கோலமிட்டாள் நின்ற இடத்தில்
விரல் கடித்து

எழுதியவர் : மு.தருமராஜு (17-Feb-25, 1:10 pm)
Tanglish : padikka pidikum
பார்வை : 25

மேலே