மு குணசேகரன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மு குணசேகரன் |
இடம் | : தஞ்சாவூர் |
பிறந்த தேதி | : 28-Aug-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 2870 |
புள்ளி | : 497 |
தோல்விகள்
குவிக்கப்பட்ட
கூடாரத்தில்
வசித்து வரும்
இவன்
தனிமைக்கு காதலன் !!........
உடன் பிறவா உறவென்ற போதும்
தம்பி தங்கை தமக்கென உணர்வாயடா...
இல்லம் வேரென்ற போதும்
இதயத்தில் இடம் தருவாயடா.....
வீதிக்கு வீதி கொடி வேரென்ற போதும்
விதிக்கு விடை கொடுப்பாயடா.....
ஊர்விட்டு ஊர் வந்த போதும்
உதராது உதவிக்கரம் நீட்டுவாயடா....
மொழியறியா தேசம் கண்ட போதும்
மௌனம் களைத்து அணைப்பாயடா....
கடல் கடந்த நாடென்ற போதும்
கடமையென கட்டவிழ்த்து காப்பாயடா...
சாதி-மத மொழி-இனம் வேரென்ற போதும்
இவன் மானிடன் என மதிப்பாயடா.....
அஃதே
யாதும் ஊரே யாவரும் கேளீரென
கணியன் கண்ட கணவடா....
இன்று
அக்கனவு மெய்ப்படவே
யாதும் ஊரே யாவரும் கேளிர் மானிடா !!...
நீ
வானில் உலா வரும்
தனித்த நிலா என்று
நெருங்கி வந்தேன்
ஆனால்
உன்னருகில் உலா வரும்
மேகத்திற்கு சொந்தக்காரி
என அறிந்த போது
விண்ணும் சேர்க்காமல்
மண்ணும் ஏற்காமல்
இடையிலேயே பிரபஞ்சத்தின்
துகளாகிப் போனோம்
நானும் என் காதலும் !!.....
*********தஞ்சை குணா*********
நான் நிஜமானவள்
அன்று தொட்டு இன்றுவரை..
உன்னை தவிர
என்னை யாரும்
புரிந்து கொண்டதில்லை..
நீ கடந்த பிறகு எனக்கு நானே
புதிராய் போனேன்..
என் நினைவு
நிச்சயமாய் உனக்கும்
வலித்திருக்கும்..
யாருமற்றவளாய்
நடக்கையிலெல்லாம்
எனக்கு கொஞ்சம்
வலிக்கிறது..
நிஜங்களில்
நான் நிழலானாலும்
உன் காதலுக்கு என்றும்
நான் நிஜமானவள்.
நீ
நான் நிஜமானவள்
அன்று தொட்டு இன்றுவரை..
உன்னை தவிர
என்னை யாரும்
புரிந்து கொண்டதில்லை..
நீ கடந்த பிறகு எனக்கு நானே
புதிராய் போனேன்..
என் நினைவு
நிச்சயமாய் உனக்கும்
வலித்திருக்கும்..
யாருமற்றவளாய்
நடக்கையிலெல்லாம்
எனக்கு கொஞ்சம்
வலிக்கிறது..
நிஜங்களில்
நான் நிழலானாலும்
உன் காதலுக்கு என்றும்
நான் நிஜமானவள்.
நீ
வானம் தொலைந்ததென்று
கடலில் புதைந்து போனேன்..
புதைத்ததை எல்லாம்
பொசுக்கும் நினைவுகள்
விதைக்கின்றன..
விதை வளர்ந்து விழுது
தட்டி நின்றபோதும்..
கதை முடிந்து காணாமல்
சென்ற போதும்..
புதைத்ததை நான்
புன்னகையுடன் ,
புண் நகையுடன்
ஏற்கிறேன்..
என்னை எனக்கு தெரியும்
என்றும் நான் நிஜமானவள்.
உண்மைகள் வாழ ..
இமைகள் கசியும்
இதயங்கள் உடையும்
சில முகங்கள் சுழிக்கும்
அதனால்
கொஞ்சம் பொய்யாய்
வாழ எத்தனிக்கிறேன்
ஏற்றுக் கொள்க !
இது என்னால் சாத்தியம்
இல்லை எனில்
சகித்து கொள்க!
இதயத்திற்கு
நடிக்கத்தெரியாது
அதுதான்
துடித்துக்கொண்டிருக்கிறது
நம் மனதை
கவர்ந்தவை எல்லாம்
நமக்காகவே படைக்க
பட்டதாய் எண்ணி
உயிருக்கு உயிராய்
நேசித்து விடுகிறோம் !.....
இந்த உலகில்
யாருக்காகவும் எதுவும்
படைக்கப் படுவது இல்லை
என இறைவன் வகுத்த
நியதியை உணராமலேயே !!.......
*********தஞ்சை குணா***********
கோடியில் வாழ்பவனோ
வாழ்க்கையை பணத்தில்
தொலைக்கின்றான் !..... அட
தெருக்கோடி தனில்
வாழ்பவனோ பணத்தை
மட்டுமே தன்
வாழ்க்கை தனில்
தொலைக்கின்றான் !!.....
***************தஞ்சை குணா*************
மின்னுவதெல்லாம்
பொண்ணல்ல என
அறிந்தும் அவளை
அறிமுகப் படுத்தி - உனக்கு
காயங்களை தந்த
என்னை மன்னிப்பாயோ இதயமே !
இப்படிக்கு கண்கள் !!
**********தஞ்சை குணா ********
நண்பர்கள் (129)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

abdullah
தஞ்சை

அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி

மகேஷ் முருகையன்
தஞ்சை மற்றும் சென்னை
