ஏமாற்றம்

நீ
வானில் உலா வரும்
தனித்த நிலா என்று
நெருங்கி வந்தேன்

ஆனால்

உன்னருகில் உலா வரும்
மேகத்திற்கு சொந்தக்காரி
என அறிந்த போது

விண்ணும் சேர்க்காமல்
மண்ணும் ஏற்காமல்

இடையிலேயே பிரபஞ்சத்தின்
துகளாகிப் போனோம்
நானும் என் காதலும் !!.....

*********தஞ்சை குணா*********

எழுதியவர் : மு. குணசேகரன் (12-Nov-18, 3:49 pm)
சேர்த்தது : மு குணசேகரன்
Tanglish : yematram
பார்வை : 636

மேலே