ஆசையின்றி ஓர் கடிதம்

கடன் வாங்கிய காகிதத்தில்...

இரவல் பேனா கொண்டு எழுதப்பட்ட
கடிதமிது காதலியே...

என் விரல் தொட்டுவிட்ட போதிலும்
இது என்னுடையதல்லவே....

மழையில் இன்றும் நனைகிறேன்...

ஆனால் ஏனோ அன்று கண்ட சுகமில்லை...

என் கற்பனைகளில்....
மழையில் நாம் மட்டுமல்ல
நம் மழலை இன்றும்கூட

நம்மோடு விளையாடிக்கொண்டு இருக்கிறாள்....


மீண்டும் முரண்பட்ட நம் கருத்துகளால்
சிறு சண்டை...

அதிகாலைகீற்றுகள் நம் இல்லத்தை அலங்கரிக்கின்றன...

புழுது புலர்ந்து சிலமணி ஆனபோதிலும் என்மார்பில் நீ உறங்கிக்கொண்டு தான் இருக்கிறாய்...

மீண்டும் மீண்டும் நம் திருமணம் நிறைவேறிக்கொண்டுதான் இருக்கிறது...

இன்றும் கூட உன் உன்விழி காண நான் இமை திறக்கையில்...
ஏனோ தென்பட்டு விட்டது...

ஒரு திருமணப் பத்திரிக்கை...

நம்முடையதென்று இருந்திருந்தால்
இக்கடிதம் என்னுள் உறைந்திருக்கும்...

அதுவோ உன்னுடையதென்று ஆயிற்று...

எல்லோரும் போல் நீ இல்லை...
ஏனோ இப்பணப் பிணி
உன்னையும் விட்டு வைக்க வில்லை...

இக்கடிதம் உன்கைகளிலும்...
இரவல் பேனா உரியவரிடத்திலும்
சேரும் வேளையில்...
இந்த ஏழைக்காதலனின் கற்பனைகள்...
யாராலும் கலைக்க முடியாமல் போகப்போகிறது....

போய்வரவா...

எழுதியவர் : PRem0 (5-Nov-18, 7:00 am)
சேர்த்தது : P Rem O
பார்வை : 826

மேலே