பதக் பதக்
டேய் ஜக்ரேஷ் உனக்குத் திருமணம் ஆகி
அஞ்சு வருசம் உன் மனைவிக்கு குழந்தைப்
பேரே இல்லைனு கோயில் கோயிலா
போயிட்டிருந்தீங்க. நானும் வடக்க
போனவன் இரண்டு வருசம் கழிச்சு
நேத்துத் தான் குடும்பத்தோட நம்ம
ஊருக்கு வந்தோம். நல்ல செய்தி உண்டா?
@@@@@@@
ஆமாண்டா அகிலேஷ்ராஜா. போன
வருசம் எங்க தவத்தின் பலனா அழகான
ஆண் குழந்தை பிறந்தது. அவன் இராசிக்கு
முதலமைச்சர் ஆகும் வாய்ப்பே உள்ளதாம்.
நம்ம மாநிலத்தில் இல்லை. வட மாநிலம்
ஒன்றின் முதல்வர் ஆவானாம்.
@@@@@@
அடேயப்பா. உம் பையன் அதிர்ஷ்டசாலிடா.
நீயும் இப்பவே குடும்பத்தோட பீகாருக்கு
வா. என்னோட நிறுவனத்தில் உன் கல்வித்
தகுதிக்குத் தகுந்த வேலை காலியா
இருக்குது. மாதம் இரண்டு இலட்சம்
சம்பளம். உனக்குத் தனி உந்து வண்டி
(கார்), பங்களா. இரண்டு வேலையாட்கள்.
என்னடா சொல்லற?
@@@@@@
டேய் எம் பையனின் எதிர்காலம் பற்றி
சோதிடர் சொன்னது நடக்கும்ன்னா நான்
வடக்க வர்றது கட்டாயம்.
@@@@@@@@
அது சரி உம் பையனுக்கு இந்திப் பேரு
தானே வச்சிருக்கிற?
@@@@@@
ஏண்டா எம் பையனுக்குத் தமிழ்ப் பேரை
வைக்கிறதுக்கு நான் என்ன
பைத்தியகாரனா? பெரும்பாலான
தமிழர்கள் எவ்வழி அவ்வழி நானும். எம்
பையன் பேரு உமாசந்த் பதக். நாங்க
அவனை பதக், பதக்னு கூப்புடுவோம்.
@@@@@@@
அருமைடா நண்பா. ஸ்வீட் நேம்.

