P Rem O - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : P Rem O |
இடம் | : ஒட்டன்சத்திரம் |
பிறந்த தேதி | : 14-Feb-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 642 |
புள்ளி | : 56 |
தனிமைகள் மட்டுமே துணையென தொடரும் நபர்களின் நான் ஒருவன்
"மின்னுவதெல்லாம் பொன்னல்ல"
கண்ணே உன் கண்களை காணும் வரையில். . .
காத்திருக்கும் . . .
விரட்டிடும் விரல் நுனியை
விலகாது பற்றிக் கொள்ளும்
ஆழியென ஆசையில்
அன்புடன் - என் ஆவல்கள். . .
காலங்கள் பலவும் கடந்து விட்டோம்
வேண்டாமென்று விலகுகின்றோம்
காணாதது போல்
நான் கடப்பேன்
எனினும்
உன் விழிகள் தானடி
எனை வதைக்கிறது...
விலக நினைக்கும் முதல்
கணத்திலேயே
தோற்றுவிடுகிறேன்
விலக்கிக்கொள்ள மறுக்கும்
நினைவுகளால்...
மெல்ல இருண்ட விட்ட
வானம்...
சூழ்ந்து வரும்
கார்மேகங்கள்...
மண்ணை சுழற்றிக்கொண்டு
வீசும் ஈரக்காற்று...
ஏக்கங்களை தீர்த்து வைத்த
இடியின் பேரொலி...
இதை கவனித்துக்கொண்டே
முகத்தில் விழுந்த
மழைத்துளியுடன் தன் கண்ணீரையும்
துடைத்துக்கொண்ட
விவசாயி...
அவன் உள்ளம் போல்
பூரிப்பில்
எங்களது
வானம் பார்த்த பூமி....
இரவெல்லாம் துவைத்து
இருள் அணிந்தது
விடிந்த பகலை.
என் சோகம் கண்ட
கண்ணீரும்...
என்னை விட்டு பிரிந்து செல்கிறது...
என்றும் போல்
இன்றும்...
தனியாக நான்
இனம் புரியா சோகம்
இமைகளை
பாரமாக்கியதால்...
நீளும் நொடிகள்...
யுகங்களாய் இரவுகள்...