நிலக் காதலன் மதிவாணன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  நிலக் காதலன் மதிவாணன்
இடம்:  பரமக்குடி
பிறந்த தேதி :  30-May-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Aug-2018
பார்த்தவர்கள்:  1306
புள்ளி:  8

என்னைப் பற்றி...

நிழற் பெயர்: மதி.
நிஜப் பெயர்: கரு . மதிவாணன்.
தமிழனாய் பிறந்து, பரமக்குடியில் பள்ளிக்கல்வியும், மதுரையில் மேலாண்மை பட்டப்படிப்பும் முடித்து தற்போது சென்னையில் பணியாற்றி வருகிறேன்.
அன்னையின் செல்வனாய், தந்தையின் சிற்பமாய், தமிழ் சுவாசியாக இணையத்தில் உலா வருகிறேன்.
நான் பார்த்தவைகளையும், படித்தவைகளையும், கேட்டவைகளையும் உங்களோடு இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
எனது எண்ணச்சிதறல்களையும், நான் உணர்ந்த நிழலுலக நிஜங்களையும் எனக்குத் தெரிந்த தமிழில் இந்த டிஜிட்டல் பதிவுலகில் பதிக்கிறேன்.
என் எண்ணங்களுக்கும், எழுத்துக்களுக்கும் வரைமுறை இல்லை! இவ்வலைபூவில் குறிப்பிட்டவையனைத்தும் என் சொந்தக் கருத்துக்களேயாகும், யாரையும் புண்படுத்தும் நோக்கில் பதிக்கப்படவில்லை.
வாசகர்களின் விமர்சனங்களும் கருத்துக்களும் வரவேற்கப்பட்டுகின்றன! பிழைகளைச் சுட்டிக்காட்டும் நண்பர்களுக்குக் கூடுதல் நன்றி!
இவ்வலைபூவிற்கு விஜயம் செய்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி கூறி என் தமிழ்ப்பயணத்தை இனிதே தொடர்கிறேன் !!!!
அன்புடன்.
கரு. மதிவாணன்.

என் படைப்புகள்
நிலக் காதலன் மதிவாணன் செய்திகள்
நிலக் காதலன் மதிவாணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Aug-2018 10:03 pm

அன்பே !
உன் அழகை
தினம் தினம் - பார்க்கும்
உன்
வீட்டுக் கண்ணாடியை
உடைத்து விடவேண்டும்
என்ற
உத்வேகம்
எனக்குள் !

மேலும்

நிலக் காதலன் மதிவாணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Aug-2018 9:53 pm

நான்
உன்னைப் பார்க்கிறேன்;
நீயோ
மண்ணை பார்க்கிறாய் ..
உனக்கு
மண் பிடிக்குமானால் சொல் !
நான்
மண்ணோடு மண்ணாகிறேன்
நீ பார்ப்பதற்காக !!

மேலும்

நிலக் காதலன் மதிவாணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2018 9:11 am

உப்பை கண்டறிய வேதியல் சோதனை....
பெண்ணே உன் மனத்தைக் கண்டறிய என்ன சோதனை???

மேலும்

நிலக் காதலன் மதிவாணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2018 8:45 am

விடிந்தபின்பு தேடுகிறேன் உன் நினைவில் தொலைந்துவிட்ட ஏன் உறக்கத்தை !!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே