வானம் பார்த்த பூமி
மெல்ல இருண்ட விட்ட
வானம்...
சூழ்ந்து வரும்
கார்மேகங்கள்...
மண்ணை சுழற்றிக்கொண்டு
வீசும் ஈரக்காற்று...
ஏக்கங்களை தீர்த்து வைத்த
இடியின் பேரொலி...
இதை கவனித்துக்கொண்டே
முகத்தில் விழுந்த
மழைத்துளியுடன் தன் கண்ணீரையும்
துடைத்துக்கொண்ட
விவசாயி...
அவன் உள்ளம் போல்
பூரிப்பில்
எங்களது
வானம் பார்த்த பூமி....