ஜெயஸ்ரீவித்யாவின் கானல் அப்பா

கடல் குடையும்
நகரத்தில்
ஓய்வறியா பிழைப்பு...
தகிக்கும் நகரத்தில்
தனியே தந்தை.
நாட்களில் பிடித்தெரியும்
நெருப்பின் வெம்மையோடு
வீட்டு வாசலெங்கும்
மோதிச் சிதருகின்றன
நீ நடைபழக்கிய
நாட்களின் நினைவு.
பெருங்கப்பல் ஒன்று
துளித்துளியாய் உடைகிறது.
எனது விழிப்புகளில்
இரவும் இருளுமே.
துயருற்ற உடலுடன்
என்னதான் பேசுவாய்
என் அப்பா....
உனக்குள் நீயே
பேசுவதெல்லாம்
இனிமேல் நீ எனக்கு
காட்ட மறுத்த காட்சி.
விட்டுவிட்டும் விடாமலும்
உன்மீது தொற்றி அலைந்த
பாலகப் பருவங்கள்
நினைவில் திரள
இன்றும் தனித்தில்லை
நாங்கள் எப்போதும்...
இங்கும் இருக்கிறது
அப்பாவின் வாசனை.

எழுதியவர் : ஸ்பரிசன் (9-Mar-18, 6:10 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 734

மேலே