கடந்து போன சுவடுகள்

கண் எரிச்சலென்றாலும்
பாவம் பார்க்காமல் தேய்த்து
ஒரு கெஜமோ ரெண்டு கெஜமோ
சரியாய் நினைவு இல்லை
என்றோ எடுத்ததில்
அழகாய் தைத்து
குளித்த ஈரத்தில்
கொக்கி தையல்
தொல தொல தொங்கல்
வளர்த்துவிடுவாய் என்ற சமாதானத்தோடு
ஊர்தேடி உலகம் தேடி
பார்த்தவரோடெல்லாம்
பகிர்ந்த
பத்துபைசா பண்டம்
கால்விழுந்த
மரியாதை பயிற்சி
நிமிடம் ஒன்றில் வீடு தாங்காத
நினைவு புரட்டல்
கைபேசி பகிர்வு
இந்தநாளில் .....