வான்மதி கோபால் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : வான்மதி கோபால் |
இடம் | : trichy |
பிறந்த தேதி | : 09-Mar-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 989 |
புள்ளி | : 212 |
துரத்தும் தேடல்களுடன் தேடிக்கொண்டே நான் ..................
எதிரென இவன் விழி
கதறலில் என் விழி
இருதய கீச்சலும்
இதமாய் கேட்டிட
அருகினில் அவனும்
அதிகமாய் வருவதால்
கலவர நிலை
கொஞ்சம் எனக்கென
விருப்பங்கள் கொளுத்துது
எரிகிறேன் விறகென
நாணி குருகுகிறேன்
நான் உன் அருகில் என்றால்
உன் தூரமே
என் நிறைய இம்சை
நீ அருகில் என்றால்
நானும் மறப்பேன் என் அஹிம்சை .....
கண் எரிச்சலென்றாலும்
பாவம் பார்க்காமல் தேய்த்து
ஒரு கெஜமோ ரெண்டு கெஜமோ
சரியாய் நினைவு இல்லை
என்றோ எடுத்ததில்
அழகாய் தைத்து
குளித்த ஈரத்தில்
கொக்கி தையல்
தொல தொல தொங்கல்
வளர்த்துவிடுவாய் என்ற சமாதானத்தோடு
ஊர்தேடி உலகம் தேடி
பார்த்தவரோடெல்லாம்
பகிர்ந்த
பத்துபைசா பண்டம்
கால்விழுந்த
மரியாதை பயிற்சி
நிமிடம் ஒன்றில் வீடு தாங்காத
நினைவு புரட்டல்
கைபேசி பகிர்வு
இந்தநாளில் .....
இடிந்த இடிபாடுகளோடு
இணைந்து விட்ட மனிதநேயம்
பிணங்கள் எல்லாம் ஒன்றுகூடி
உயிர்தவனுக்காக பிராத்தனை
தண்ணீரெல்லாம் வண்ணமயம்
எண்ணெய்க்கு என்று மாறியதோ ?
பிண்டம் அறுத்து இந்த
அண்டம் வேண்டாம்
ஆயுதமே ,,,,,
ஏந்தியவனிடமே சொல்
இரத்தமும் சதையும் கசக்கும் என்று
வல்லரசே உன் வன்மம் எண்ணெய் குமிழிக்கு என்றால்
கையேந்தி நில் பிச்சை இட்டு விடுகிறோம் .................
ஏற்காத ஒன்றுக்குத்தான்
ஏங்குது இந்த நெஞ்சமும்
என் முடிந்த கவி ஒன்று
மூச்சு விட நினைக்குது
இல்லை எல்லாம் இருந்ததாய் மாற
ஏற்றுவிட்டதாய் நினைக்கிறன் என் காதலை
தொல்லியல் தேடலாய்
தொடர்கிறேன் என் நினைவுகளை
இருவிழி பார்த்து
இதழ் பேச்சு
எதுவும் மறக்கவில்லை
உன் நினைவுகள் உயிர்கலந்ததால்
விடிந்து தான் தெரிந்தது
அது என் புரியாத புலம்பல் என்று
நான் நிலவைக் கண்டு அச்சப்படுகிறேன்; இரவானால் என் பெண்மை துண்டு துண்டாய் வெட்டப்படுகிறது. மூங்கில் காடுகள் எனக்கான சிலுவைகளையும் நான் விளையாட பொம்மைகளையும் வாங்கி வருகிறது. பூக்கள் போல காலையில் மலர்கிறேன்; மாலையில் வாடுகிறேன். கண்ணீர் துடைத்த கைக்குட்டைகள் தூமத்துணிகளின் நாற்றம் வீசுகின்றது. நுரை முட்டைகள் போல உள்ளத்தால் உடைந்து போகிறேன்; சுவாசங்களால் அடைக்கப்பட்ட பலூன்கள் போல காயங்களால் நிரம்பி வழிகிறேன். குருடன் வரைந்த சித்திரம் போல நிம்மதியை தேடியலைகிறேன். முள் உடைந்த பேனாக்களை வைத்துக் கொண்டு விதியை மாற்றி எழுத நினைக்கிறேன். யாருமில்லாத முச்சந்தியில் கருத்தடை மாத்திரைகளை வைத்துக் கொண்டு கர்
ஊடகமும் செய்தியும் பொய்யாய் போனதால்
உண்மையை எங்கே என்று தேடுகிறோம்
வேண்டாத அணு உலையை
திணித்துவிட இடம் இருக்கு
வேண்டும் மருத்துவம்
திறந்திட இடம் இல்லையா?
இலைக்கு கொடுத்த மரியாதையை
என் இனத்துக்கு கொடுக்க மறந்தது ஏன் ?
இயற்கை சீற்றத்தை ஏதும் சொல்லவில்லை
காத்திட மறந்தது மறுத்தது ஏன் ?
காற்றை வித்தவனுக்கு
சீக்கிரமாய் (----------- தண்டனை ) விடுதலை
நீட் கொலைக்கு
முடுக்கி விடுகையில்
சிலிர்க்கிறேன் கொஞ்சம்
திருகி பறக்கையில்
நான் ராஜாளி
தினமும் காதல்
இவனோடு மட்டும் தான்
தனிமை அழகு
இவன் உரசலில் மட்டும்
இரைச்சலும் அழகு
இவன் உறுமலில் மட்டும்
ரகசியம் பேசுகிறேன்
பாதியில் நின்று
ரசிக்கவும் பழக்கம்
இவன் பாதிவழியில் நின்றால்
பசியும் மறக்கிறேன்
இவனோடு பறக்கையில்
மறக்காமல் சிரிக்கிறேன்
என் தனிமையை இவன் கெடுப்பதால்
முறுக்கிதான் பறக்கிறேன்
முகத்தில் சிரிப்போடு
உதைத்தும் அடித்தும்
உறுமல் மட்டும் உன் பதில்
பிரிவு இல்லை கைகளில்
பாதை உள்ள தூரம் வரை
ஒலியோடு நானும்
அலறுகிறேன் இவனோடு
சிக்கல் காதலாய்
சோதனை உன்னோடும்
சகித்து கொள்கிறேன்
என் சகி உன்னோடு
அழைத்து செல்ல
அவனை பழகினேன்
என் அத்தனையும் நீ என்று
இப்போது புரிகிறேன்
அறியா பாதை
முடியா ஓவியம்
மவுன இசை
நிமிர்ந்து விடாத திருப்பம்
நின்று விடாத காற்று
வெட்க சத்தம்
பேசும் மவுனம்
பேசிவிடாத கானம்
எல்லாம்ரசிக்கிறேன் நீ
இல்லா நேரம் .............
கண் சிமிட்ட மறந்தேன் உன்னை கண்ட அந்த நேரத்தில்
ஏதேதோ வாய் பேச என் இமை மட்டும் உனை பேச
கண்ணோடு கண் பார்த்து தேடல் நிறைவானது
குழந்தை யா னே ன் மறந்து போனேன் சிரித்து கொண்டே தவித்து போனேன்
தயக்கம் நீங்கி என் அருகில் நீயோ ?
அது கனவு என்று கடிந்து கொண்டேன்
சிறகு இருந்தும் செல்ல மறந்தேன் நீயோ ? காரணம் நீயோ ???????
என் எண்ணங்களை தின்றவன் நீயாட,
என் கா ட்சியாய் நிறைந்தவன் நீயாட,
கண்களால் உன்னை படம் எடுக்கின்றேன்,
இதயத்தில் உன்னை ரசிக்கின்றேன்,
எனக்கான ரகசியம் பகிர்கிறேன்,
உன்னோடு
தனிமை தேடுக்கின்றேன்,
அதில் நீ நிறைய வே ண்டுக்கின்றேன்,
தொ ட் டு ரசிக்கின்றேன்,உன்னை
க ட் டி அணைக்கின்றேன் தலையணையை
தினம் தினம் எந்தன் இளமையை
சுமை என நகர்த்துகின்றேன்,
உன் நினை வா லே....................
தூரத்தில் யாரோ
துருவிப் பார்ப்பதாய்
ஆறாம் புலன்
சொல்லியது
சரிவாய் நின்று
தொட்டுப் பார்த்ததும்
சரியாய்ச் சரிந்தான்
மேனியில்
கஞ்சிவாசம் கூட
போகாத
புத்தம் புதிய சட்டை
உண்மையில் எனக்குப்
பிடித்தது
வேண்டும் வேண்டும் என்று
உள் மனது சொல்லியது
முதல் பார்வையிலேயே
விரும்பியது
எனக்குக் கூட சங்கடம்தான்
வெட்கத்தை விட்டுக்
கேட்டால் என்ன?
கேட்கவே வேண்டாம்
சட்டையைக் கழற்றுவோம்
யார் என்ன சொல்ல.
ஒவ்வொரு பொத்தானையும்
மெதுவாகக்
கழற்ற ஆரம்பித்தேன்
யாரும் தடுக்கவில்லை
பின்னால் இருந்து யாரோ
தோளில்
தட்டியது விளங்கியது
பணிப்பெண் கேட்டு
சுற்றித் தந்தாள்
அண்ணா