காதல் அஹிம்சை

எதிரென இவன் விழி
கதறலில் என் விழி

இருதய கீச்சலும்
இதமாய் கேட்டிட

அருகினில் அவனும்
அதிகமாய் வருவதால்

கலவர நிலை
கொஞ்சம் எனக்கென

விருப்பங்கள் கொளுத்துது
எரிகிறேன் விறகென

நாணி குருகுகிறேன்
நான் உன் அருகில் என்றால்

உன் தூரமே
என் நிறைய இம்சை

நீ அருகில் என்றால்
நானும் மறப்பேன் என் அஹிம்சை .....

எழுதியவர் : வான்மதி கோபால் (19-Jul-18, 5:22 pm)
சேர்த்தது : வான்மதி கோபால்
Tanglish : kaadhal ahimsai
பார்வை : 260

மேலே