தீயில் வீழ்ந்தேன்

தீயில் வீழ்ந்தேன்.....
வலி ஏதும் இல்லை...
காயங்கள் மட்டுமே....!!!

உன் நினைவில் மூழ்கினேன்...
காயங்கள் ஏதும் இல்லை...
வலிகள் மட்டுமே...!!!


மௌனமாய்
குத்தி கிழிக்கிறது...
மறக்க நினைத்தும்
மறக்க முடியாத பல நினைவுகள்...

கடந்து போன நாட்களெல்லாம்..
ஈட்டியாக உரு கொண்டு...
பாய்ந்து வருகிறது.......
உள்ளத்தை தைத்திட....!!!
எதிர்கொள்ள ஆயுதங்கள்
ஏதுமின்றி... உணர்வுகள் இருந்தும்...
கற்சிலையாய் நின்று விட்டேன்.....

எழுதியவர் : லீலா லோகிசௌமி (19-Jul-18, 5:13 pm)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
பார்வை : 208

மேலே