இரவில் தோன்றும் இரவி
வெளிச்சம் கரைந்தோடிய
வானமும் இருளை நாடிய
இந்த தார்(மாலை) பொழுதிலே
என் தேவதை அவள் வந்தாள்
என்னோடு செல்லமாக
சின்ன போர் ஒன்று தோடுத்தாள்
முதலில் பார்வை வீசினால்
தடுக்க ஓர் ஆயுதமும்
இல்லை என்னிடம்
என் இதயத்தை எடுத்து நீட்டினேன்
உள்ளே ஊடுருவி சென்ற
அவள் பார்வை அங்கேயே
குடி கொண்டது
இனி இது தான் என்
குடிசை என்றது
இப்போது புன்னகையை
வீசிவிட்டாள்
எடுத்து நீட்ட என்னிடம்
எதுவும் இல்லை
என்னவென்று சொல்வது
இப்போது அவளின்
புன்னகை என்னையே
திருடிப்போனது
அவளோ என்னை
வென்றுப் போனாள்
வானமோ மெல்ல இருட்டிப்போனது
இந்நேரம் அவள் மீண்டும்
காதல் போர் தொடுக்க
வந்தால் இன்று என்
இரவு வானில்
தோன்றும் ஓர் இரவி(சூரியன்)....!!!