நீராகத் தான்விரியும் காவிரி நல்லாறு
ஏழாக விரியுது வானவில் வண்ணம்
இதழோடு விரியுது வண்ணப் பூக்கள்
நீராக விரியுது காவிரி ஆறு
நெஞ்சோடு விரிகிறாய் நீஅன்பு மலரே !
நிலை மண்டில ஆசிரியப்பா .
ஏழாகத் தான்விரியும் வானவில் வண்ணம்
இதழோடு தான்விரியும் வண்ண நறும்பூக்கள்
நீராகத் தான்விரியும் காவிரி நல்லாறு
நெஞ்சோடு நீவிரி வாய்
---இன்னிசை வெண்பா