என் புரியாத புலம்பல்

ஏற்காத ஒன்றுக்குத்தான்
ஏங்குது இந்த நெஞ்சமும்

என் முடிந்த கவி ஒன்று
மூச்சு விட நினைக்குது

இல்லை எல்லாம் இருந்ததாய் மாற
ஏற்றுவிட்டதாய் நினைக்கிறன் என் காதலை

தொல்லியல் தேடலாய்
தொடர்கிறேன் என் நினைவுகளை

இருவிழி பார்த்து
இதழ் பேச்சு

எதுவும் மறக்கவில்லை
உன் நினைவுகள் உயிர்கலந்ததால்

விடிந்து தான் தெரிந்தது
அது என் புரியாத புலம்பல் என்று

எழுதியவர் : வான்மதி கோபால் (14-Feb-18, 3:53 pm)
பார்வை : 372

மேலே