இன்றைய காதல்🎆💞
காதலர் தினமாம் இன்று எத்தனை
காதல் ஜெயமாகும்💟
எத்தனை காதல் மாயமாகும்💟
தெரியவில்லை ■அன்றைய நாளில் காதலிக்க ஏது தினம்?(பயம்)
இன்றைய நாளில் காதலர்க்கோர் காதலர் தினம்★
அச்சமும் நாணமும், ஒருசேர மேனியில் படர்ந்தாட,பார்வை கணை
வீசி ,இணை தேடிய அன்றையகாதல்
வேகமும்தாபமும்,ஒருசேர பரபரவென பறந்து இணையத்தில்
தேடி இணைகின்ற இன்றைய காதல்,
தண்ணீர் குடம் ஏந்தி வரும் தாவணி
காண தவமிருந்து கண்டது அன்று.★
கணினி பார்த்து பின் கண்ணில்
பார்த்து கை கோர்க்கும் காதல் இன்று:★
கனவில் கூட காதலியை கட்டி அணைக்க கை கூசிய காதல்அன்று●
உணவு கொறிக்கும் நேரத்திற்குள்
முடிவெடுத்து டேட்டிங் போகும் காதல் இன்று🏍🏍🚗
பெற்றோருக்கு பயந்து தயங்கி நின்ற காதல் அன்று◆
பெற்றோர் துறந்து ஓங்கி நிற்கும் காதல் இன்று●
அம்பிகாபதி அமராவதிவாழவில்லை
அன்று💟ஆனால் அவர் காதல் இன்று வரை வாழ்கிறது💟
நாளுக்கொரு ஆள் மாற்றும் மேல் நாட்டின் ரோமியோ ஜூலியட் காதல்
இன்னும் வாழ்கிறது💟
இன்றும் காதலை வாழ வைக்க இன்றைய காதலரிலும் உயிர் கொடுப்பாருண்டு💟 அவர் வாழ்க
அவர் காதல் வாழ்க💟