குலோத்துங்க சோழன் கோவை - நூல் - பாங்கிமதியுடன்பாடு - புனங்கண்டு மகிழ்தல் - பாடல் 94

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-

தலைவன் பாங்கனைச் சார்தல்.

பாங்கன் தலைவனை யுற்றது வினாவல்

தலைவ னுற்ற துரைத்தல்.

கற்றறி பாங்கன் கழறல்.

கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்.

பாங்கன் கிழவோற் பழித்தல்.

கிழவோன் வேட்கை தாங்கற்கருமை சாற்றல்.

(இ-ள்) தலைவன் பாங்கனைநோக்கி நீ பழிக்கின்ற என்னுள்ளந் தேறுதற்கு வேட்கை யென்னாற் றாங்கமுடியாதென்று கூறுதல்.

இதுவுமது.

பாங்கன் றன்மனத்தழுங்கல்.

ஒன்பதாவது - பாங்கிமதி யுடன்பாடு.

அஃதாவது--தலைவி வேறுபாட்டைப் புணர்ச்சியுண்மை யறிந்தாராய்ந்து தோழி தன்மதியை யுடன்படுத்தல்; அது: முன்னுறவுணர்தல், குறையுறவுணர்தல், இருவருமுளவழி யவன்வரவுணர்தலென மூன்றுவகைப்படும்;

அவற்றுள் - முன்னுறவுணர்தலாவது தலைவனைப் புணர்ந்து மீண்டுவந்து தன் முன்னுற்ற தலைவியின் வேறுபாட்டைப் பாங்கி கண்டு அதனானே கூட்ட முண்மையறிதல்;

அது: வகையின் வகையாய் ஐயமுற்றோர்தல், ஐயந்தீர்தல், பல்வேறு கவர்பொருட் சொல்லி நாடல் என மூன்றாம்;

அவற்றுள்- ஐயமுற்றோர்தல் பலவகைப்படும்;

குறையுறவுணர்தல்.

அஃதாவது-தலைவன் தழைமுதலியவற்றைக் கொண்டு தன்பாற் குறையுற்று நிற்பக்கண்டு பாங்கி அதனானே கூட்டமுண்டென்றறிதல்; அது: தேர்தல் தெளிதலென இருவகைப்படும். தேர்தல்-ஆராய்ச்சி செய்தல். அவைவருமாறு:-

பெட்டவாயில் பெற்றிரவு வலியுறுத்தல்.

ஊர்வினாதல்.

பேர்வினாதல்.

கெடுதிவினாவல்.

நெஞ்சு வினாதல்.

வழிவினாதல்

மொழியாமை வினாதல்.

இடைவினாதல்.

தேர்தல்.

எண்ணந் தெளிதல்.

இருவரும் உளவழியவன் வரவுணர்தல்

அஃதாவது-தலைவியுந் தானும் ஒருங்கிருந்த விடத்தில் தலைவன் றனிவரப் பாங்கிகண்டு அதனானே கலப்புண்மை யறிதல், அதன்விரி வருமாறு:-

கையுறை யேந்திவருதல்.

புனங்கண்டு மகிழ்தல்.

(இ-ள்) அவ்விருவரு மிருக்கப்பெற்ற வனத்தின் வளப்பத்தைப் பார்த்து மகிழ்தல்.

கட்டளைக் கலித்துறை

தாயுந் தமரு மெனத்தமிழ் தாங்கியத் தண்டமிழை
யாயுங் கமகன் குலோத்துங்க சோழ னளகைவெற்பி
லேயுந் திருவனை யார்புனத் தேயிதண் மீதிருக்க
மேயுங் கிளிக்கும் பிணைக்குங்கைம் மாறெம்மில் வேறி(ல்)லையே! 94

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (8-Jan-25, 8:57 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே