நன்மதி வெண்பா - நூல் - பாடல் 78
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
பாலார்ந்த நன்னீரப் பால்போ லிருப்பினும்பால்
மேலாங் குணம்போம் விதம்போல - மாலார்ந்த
துன்மதியின் கூட்டுறவு துன்புறுத்தும் வாய்மையினை
நன்மதியே யோர்ந்து நவில்! 78