BABUSHOBHA - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : BABUSHOBHA |
இடம் | : அவிநாசி,திருப்பூர் |
பிறந்த தேதி | : 06-May-1970 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 1236 |
புள்ளி | : 273 |
தாய் மொழி கன்னடமாயினும்,
அறிவும்,செறிவும்,
தந்த தமிழ் பால்
பற்று மிகுந்தவன்.
பள்ளி படிப்பு
பாதியாயினும்,பிறர்
சொல்லியது படிக்க
ஆர்வம் அதிகம்
இளையராஜா இசையில்
மூழ்கிப்போதலில் இன்பம்,அண்ட சராசரங்களை ஆட்டி படைக்கும் சக்தி ஒன்று நமக்கு மேலே இருந்து நம்மையும் பாதுகாத்து வருகிறது என்று நம்பி அதற்கு கடவுள் என்று பெயர் வைத்து வணங்கும் பக்தியுடையோன். நம்மால் முடிந்த உதவி பிறருக்கு செய்ய வேண்டும் என்று எண்ணி வாழ்பவன்.
இந்த ஹேவிளம்பி வருடத்தில் கவிதை விளம்ப விழைந்துள்ளேன்🙏
ஆட்டம் ஆடுவது ஆனந்த்தால்
ஆட்டம் போடுவது ஆணவத்தால்
வாட்டம் ஏனோ உனக்கு வருத்தத்தால்
நோட்டம் போடு மகிழ்வோரை மட்டும்
ஊட்டம் உண்டு உன் வாழ்வில் நிச்சயம்
ஏற்றம் காண ஏறி மிதிக்காதே யாரையும்
மாற்றம் வரும் வரை நீ யாரையாவது ஏற்றி விடு
வெற்றி நிச்சயம்
அரைக்கு ஆடையின்றி அடம்பிடித்து நான் கேட்க, காசில்லை போ என கன்னத்தில் அறை விட அப்பனுமில்லை, கவலையுடன் அடைந்து கொள்ள ஓர் அறையுமில்லை, என் நிலை மறைக்க திரையுமில்லை,
வயிற்றுக்கு இரையுமில்லை,
என் நிலை கண்டிரங்கும்
இறையுமில்லை,
சிறையாவது கொடுங்கள்,
இலையேல் விரைவில் என் உயிர் வான் நோக்கி விரையும்,
விறைத்துக் கொண்டு திரியும் குறை
மன மாந்தர்களே, நிறை மனது மாந்தர்களுடன் சேர்ந்து, மடிந்து என் உடல் விறைத்து போகும் முன் விரைந்து காப்பீரா?
படி அரிசி சேர்க்க பல படிகள்
ஏறி இறங்கி சோர்ந்தேன்
சில அடிகள் நடக்க முடியாது
கல்லடி பட்டு இடம் சேர்ந்தேன்,
முகம் அழகு லட்சணமாக
இருந்தும் ஈகை குணமின்றி
மனம் அவ லட்சணமாக
இருக்க கண்டேன்,
முகத்தின் அழகில் விள்ளல்
இருந்தாலும் வளைக்கரம்
வள்ளலாக இருப்பதையும்
கண்டேன்,
ஒரு வேளை சோறின்றி நான் தவிக்க பல வேளை சோறு பாத்திரம் துலக்கும் இடத்தில் விரவிக்கிடக்க கண்டு விரக்தி கொண்டேன்,
இறைவா, இந்த பூமியைத்தான் மலையும் மடுவுமாய் படைத்தாய்,
மனித மனங்களையும்
வாழ்க்கையையும் ஏனோ
அவ்வாறே படைத்தாய்?
வாழ்க்கையில் நாம் கடந்து வந்த
நிகழ்வுகளை நடந்து கொண்டே
நினைக்கையில் வசந்தங்களும்
உண்டு, வலிகளும் உண்டு,
வசந்தங்களின் புன்னகை ஆயுள்
கூட்டிட, வேதனை நினைவுகளின்
வாதனைகள் வாழ்வைக் குறைக்கும்,
ஆக, எதிர் வரும் வலிகளையும்
கடந்து விட்ட வசந்தமாய் நினைத்து
இன்னும் நீள வாழ்வோம், இவ்வுலகம் வலி மீள ஏதாவது
செய்வோம்🌷
உனை நினைத்தேன்-
கவிதை அருவியாக கொட்டியது●
உனைச் சந்தித்தேன்-
பேச வார்த்தை கூட வரவில்லை●
உனை நினைத்தேன்-
சிறகின்றி வான் பறந்தேன்●
உனைச் சந்தித்தேன்-
என் கால்கள் ஒரு அடி கூட நகரவில்லை●
உனை நினைத்தேன்
வீரமாய் நெஞ்சு நிமிர்ந்து நடந்தேன்,
உனை சந்தித்தேன்
கோழையாய் குறுகி
குழைந்தேன்●
உனை நினைத்தேன்-
ஆனந்த நடனம் புரிந்தேன்●
உனை சந்தித்தேன்-
உன் பார்வைபட்டதும்
கை கால்கள் நடுக்கத்தில் ஆட்டம் கண்டது●
உனை நினைப்பதே பேரின்பம்-
உனை சந்தித்து காதல்
சொல்லும் தைரியம் வரவில்லை●
இக்காலத்தில் இளைஞர்கள்
Wifeஇன்றி இருப்பார்கள்,
ஆனால், Wi-fi. இல்லாதிருப்பாரோ?
இன்டர்நெட் உடன் உறவாடும் அளவு
இல்லத்தரசியிடம்
உறவாடுவதில்லை
இன்றைய கணவர்கள்●
தரகின்றி தகைந்த தங்கச் சிலையே,
மனமிணைந்து மடியேறிய மங்கையே,
என் கனவு கன்னிகளை என்மனமிருந்து களைந்தெடுத்த
காரிகையே,
சித்திரை வெயிலில் நான் ஒதுங்கும்
வேப்ப மரமே,
அமாவாசை இருட்டில் என் வழி காட்டும் மின்மினியே,
என் துன்ப வெள்ளத்தை தடுத்தேற்கும் அணைக்கட்டே,
ஆனந்த வெள்ளத்தில் மூழ்கும் போது உயிர் இணையும் சுவாசமே,
நீயின்றி என் உயிர் கடிகாரம் ஒரு
நொடியும் ஓடாதம்மா உண்மையே!
பேரின்பம் !🌟 இறைவா!
நின் கழல் அணைந்த தண்டை
தொட்டதால் விழலாய் இருந்த
என் வாழ்வு வயலாய் ஆனது!
🌸்்🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
சிற்றின்பம்! 🌸 பெண்ணே!
நின் கழலணைந்த கொலுசொலி கேட்டதில்
விழலாய் இருந்த நான் , நெல்
விழையும் நல் வயலாகிப்
போனேனடி!
வினை விதைத்தவர் வினை
அறுத்தார்! தினை விதைத்தவர்
தினை அறுத்தார்!.
உனை,எனை விதைத்தவர்
எதை அறுத்தார்! இணை சேர்ந்த நம் காதலை கருவறுத்தார்! இன மான வெறியில் நம் உயிரறுத்தார்!
வினை மனம் கொண்ட அவர்
காதலுக்குப் பொருந்தார்!
அவரை ஒறுத்தாலன்றி திருந்தார்! இவ்வுலகம்
வெறுத்தாலன்றி வருந்தார்!
சாதிதனை மறந்தார் என்றும்
மேதினியில் சிறந்தார்!
இல்லை அவர் உயிரிருந்தும்
இறந்தார்! அவர் என்றும் மனிதநேயம் இரந்தார் நிலையிருந்தார்!
மனிதனுக்கு உணவாகும்
விதை (பயிர்) ஒன்று விழிப்பது
மண்ணிலே!
முடிவில் உயிர் துறந்து மனித
உடல் கழிப்பதும் அதே மண்ணிலே! இடையில் ஏன் கூடா பேராசைகள்?
🌸🌸🌸🌸🌸🌸
உயிர்ச்சத்தற்ற உணவு உண்டு
களிப்பது தவறு!
அது நம் உயிரெடுக்க காலனை
விளிப்பது போல!
🌸🌸🌸🌸
ஃபாஸ்ட் புட் பிரியர் ஒருவர்🌸 இயற்கை உணவு உண்ணுங்கள் போஸ்டரைப் பார்த்து சிரித்தார்!🙂
சில நாளில் இயற்கை எய்தினார் போஸ்டரில் சிரித்தார்!😅