காதல் எதிரிகளே
வினை விதைத்தவர் வினை
அறுத்தார்! தினை விதைத்தவர்
தினை அறுத்தார்!.
உனை,எனை விதைத்தவர்
எதை அறுத்தார்! இணை சேர்ந்த நம் காதலை கருவறுத்தார்! இன மான வெறியில் நம் உயிரறுத்தார்!
வினை மனம் கொண்ட அவர்
காதலுக்குப் பொருந்தார்!
அவரை ஒறுத்தாலன்றி திருந்தார்! இவ்வுலகம்
வெறுத்தாலன்றி வருந்தார்!
சாதிதனை மறந்தார் என்றும்
மேதினியில் சிறந்தார்!
இல்லை அவர் உயிரிருந்தும்
இறந்தார்! அவர் என்றும் மனிதநேயம் இரந்தார் நிலையிருந்தார்!